18 வயது நிரம்பினாலும் ஜப்பானில் புகை பிடிக்கத் தடை
குழந்தைகள் பெரியவர்கள் ஆனதற்கான சட்டபூர்வமான வயது வரம்பை 20இல் இருந்து 18ஆகக் குறைக்க ஜப்பான் அரசு முயன்று வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்த முன்மொழிவு அமல்படுத்தப்பட்டால் 18 வயது நிரம்பியவர்களுக்கு வங்கியில் கடன் வாங்குதல், பெற்றோர் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளுதல் உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கும்.
எனினும், புகை பிடித்தல், மது அருந்துதல், சூதாட்டத்தில் ஈடுபடுதல் ஆகியவற்றை 20 வயது முடியும் வரை செய்யமுடியாது.
இது தொடர்பான சட்ட மசோதா ஜப்பான் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்போட்டால், புதிய வயது வரம்பு 2022ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








