நாளிதழ்களில் இன்று: ஆண் எனக்கூறி பெண்களை திருமணம் செய்து கொண்ட பெண்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினமணி - 'மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்'

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள மின்வாரிய ஊழியர்களை, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மின்துறை அமைச்சர் தங்கமணி அழைப்பு விடுத்துள்ளதாக தினமணியின் முதல் பக்க செய்தி கூறுகிறது.

காவிரி வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாக இருக்கும் செய்தியும் முதல் பக்கத்தில் பிரதான செய்தியாக தினமணி வெளியிட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'ஆண் எனக்கூறி பெண்களை திருமணம் செய்து கொண்ட பெண்'

தன்னை ஆண் என்று கூறி இரு பெண்களை திருமணம் செய்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முதல் மனைவி அளித்த வரதட்சனை கொடுமை புகாரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

தி இந்து (தமிழ்) வெளியிட்டுள்ள கார்டூன்

தினமலர் - 'பெரியார் பல்கலையில் விதிமீறல்?'

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வியில், ஊழல் மற்றும் விதிமீறல்கள் பல நடந்து வருவதாக தினமலர் நாளிதழ் சிறப்பு செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள விதிமீறல்கள், பணி நியமன முறைகேடுகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதில் பெரியார் பல்கலையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சங்கத்தினர் புகார் அளிக்க உள்ளதாகவும் இந்த செய்தி குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: