லைபீரியாவின் அதிபரான முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர்

பட மூலாதாரம், Reuters
முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர் ஜார்ஜ் வியா லைபீரியாவின் அதிபராக பதவியேற்றுள்ளார்.
தலைநகர் மொன்ரொவியாவில் நடைப்பெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது வாழ்வின் பல ஆண்டுகளை மைதானங்களில் செலவழித்திருந்தாலும், இன்றைய தினம் வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது` என்றார்.
மொன்ரொவியாவில் உள்ள சாமுவேல் டோ மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வினை, 35 ஆயிரம் மக்கள் கண்டுகளித்தனர்.
நாட்டில் அமைதியை பேணியதாக, முன்னாள் அதிபர் எலன் ஜான்சன் சிர்லீஃப்-க்கு ஜார்ஜ் வியா நன்றி தெரிவித்தார்.
ஆனால், தற்போது சிறைதண்டனை அனுபவித்துவரும் லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லரின் முன்னாள் மனைவியை துணை அதிபராக தேர்ந்தெடுத்திருப்பது பற்றி சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், Reuters
ஜார்ஜ் வியா, 1966 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி லைபீரியா தலைநகரில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் பிறந்தவர்.
போதுமான கல்வித் தகுதி இல்லை என்று இகழப்பட்ட நிலையில், வணிகப் பாடப்பிரிவில் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












