சௌதி: எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க அரசு முடிவு

தனக்குச் சொந்தமான 'ஆர்மாகோ' எனும் எண்ணெய் நிறுவனத்தை, கூட்டுப் பங்கு நிறுவனமாக சௌதி அரேபிய அரசு மாற்றியுள்ளது.

சௌதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சௌதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான்

இந்த ஆண்டு இறுதியில் இந்நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்குவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகளில் 5% வரை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். எனினும், ஆர்மாகோ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக சௌதி அரேபிய அரசே தொடரும்.

சௌதி

பட மூலாதாரம், Getty Images

முழுக்க முழுக்க எண்ணெய் வர்த்தகத்தையே சார்ந்துள்ள சௌதி பொருளாதாரத்தில், இந்தப் பெரும் எண்ணெய் நிறுவனத்தின் பங்கு விற்பனை, பிற துறைகளிலும் முதலீடு செய்வதற்கான நிதியைத் திரட்டுவதில் மையமாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :