தென்னாப்பிரிக்கா: அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு அடுத்தது அதிபர் யார்?

தென்னாப்பிரிக்க

பட மூலாதாரம், REUTERS/AFP

படக்குறிப்பு, நொக்காசன டலாமினி ஜுமா- சிரில் ராமபோசா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு அடுத்த புதிய கட்சித் தலைவர் யார் என்பதை தேர்ந்தேடுக்க தென்னாப்பிரிக்கவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தாயாராகி வருகிறது.

தற்போதைய துணை அதிபர் சிரில் ராமபோசா மற்றும் முன்னாள் அமைச்சரும், அதிபர் ஜுமாவின் முன்னாள் மனைவியுமான நொக்காசன டலாமினி ஜுமா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

இதில் வெற்றி பெறுபவர், ஜுமாவுக்கு அடுத்த தென்னாப்பிரிக்க அதிபராகலாம்.

ஆனால், இவர்களின் கசப்பான தலைமை போரால், 2019 தேசிய தேர்தலுக்கும் முன்பு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உடையலாம் என்ற அச்சங்கள் அதிகரித்துள்ளன.

ஜேக்கப் ஜுமா

பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images

படக்குறிப்பு, ஜேக்கப் ஜுமா

2019 தேர்தல் வரை, ஜுமாவால் அதிபராகத் தொடரமுடியும். 2009 முதல் ஜுமா அதிபராக இருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் ஐந்தாண்டு அதிபர் பதவியை இரண்டு முறைக்கு மேல் வகிக்க முடியாது.

ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் நடக்க உள்ள நான்கு நாள் கூட்டத்திற்காக பிரதிநிதிகள் கூடியுள்ளனர். வெற்றியாளர் பின்னணியில் கட்சி ஒன்றுபட வேண்டும் என பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அதிபர் ஜேக்கப் ஜுமா வலியுறுத்தியுள்ளார்.

68 வயதான முன்னாள் டலாமினி ஜுமாவுக்கு, அதிபர் ஜூமா ஆதரவளித்துள்ளார். மற்றோரு வேட்பாளரான 65 வயதான ராமபோசா, அரசு ஊழலுக்கு எதிராகக் கடுமையான பேசியவர். வர்த்தக சமூகத்தின் ஆதரவைப் பெற்றவர்.

சர்ச்சைகளின் மையமாக உள்ள 75 வயதான ஜுமா, பல ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். ஆனால், இவற்றை அவர் மறுக்கிறார்.

நான்கு நாள் கூட்டத்தில் 5000த்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் முதல் ஜனநாயக தேர்தல் நடந்ததில் இருந்து 20 வருடங்களுக்கு மேலாக, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தென்னாப்பிரிக்காவை ஆட்சி செய்து வருகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :