You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேச்சுவார்த்தைக்கான உரிமையை வடகொரியா ஈட்டவேண்டும்: டில்லர்சன்
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளரான ரெக்ஸ் டில்லர்சன், "பேச்சுவார்த்தைக்கான இடத்தை மீண்டும் அடைய, வடகொரியா அதற்கான உரிமையை ஈட்டவேண்டும்" என கூறியுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு, வடகொரியா தனது ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம், அவர் தெரிவித்திருந்த கருத்திற்கு, மாற்றாக இந்த கருத்துள்ளது. கடந்தவாரம், அமெரிக்காவில் பேசிய டில்லர்சன், "வடகொரியா எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் பேசத் தயார்" என்று கூறியிருந்தார்.
அந்த கருத்திற்கு எதிர்மறையான கருத்தை வெள்ளை மாளிகை அளித்திருந்தது.
உலகளவிலான கண்டனம் மற்றும் சர்வதேச அளவில் வலுத்துவரும் தடைகளையும் மீறி, இந்த ஆண்டு, பல ஆயுத சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியது.
இந்த வாரத்தொடக்கத்தில் பேசியிருந்த டில்லர்சன், "ஒன்றாக அமர்ந்து பேசலாம், நம் இருநாடுகளும் இணைந்து எந்தெந்த விஷயங்களில் பணியாற்ற முடியும் என பேசலாம்" என்று அழைத்திருந்தார்.
அவரின் கருத்தை, சீனா மற்றும் ரஷ்யா வரவேற்றிருந்தன. ஆனால், அந்த கருத்திற்கு எதிர்மறையாக வெள்ளை மாளிகை கருத்து அமைந்திருந்தது.
பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு முன்பாக, வடகொரியா எல்லா அணுஆயுதங்களையும் அழிப்போம் என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்தது.
அடுத்த சில மணிநேரங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ், அதிபரின் பார்வையில் மாற்றமில்லை என்று கூறியிருந்தார்.
"வடகொரியா, ஜப்பான், சீனா மற்றும் தென்கொரியாவிற்கு மற்றும் பாதுக்காப்பாற்ற முறையில் செயல்படவில்லை. முழு உலகிற்குமே செயல்படுகிறது" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை பேசிய டில்லர்சன், இதுகுறித்து, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுமே, வடகொரியாவை வலியுறுத்த வேண்டும் என கூறினார். இருநாடுகளும் அதை மறுத்துவிட்டன.
ஐ.நாவின் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பேசிய டில்லர்சன், "ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. ஆனால், பேச்சுவார்த்தைக்காக வடகொரியா வைக்கும் கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்கா பணியாது" என்று கூறினார்.
"பேச்சுவார்த்தை முன்பு நடக்கும் கட்டுப்பாடுகளாக, எந்த தடையையும் தளர்த்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்