ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

காங்கோவில் 4 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம்

காங்கோ ஜனநாயக குடியரசில் ஐந்துக்கு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் 4 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரச உதவி இல்லாததால் சில மாதங்களில் அக்குழந்தைகள் இறக்கலாம் என்றும் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் எச்சரித்துள்ளது.

வட கொரியாவுடன் நேரடி பேச்சுக்கு தயார்

முன்நிபந்தனைகள் இல்லாமல் வட கொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்காவின் வெளியுறத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

இஸ்ரேல் நோக்கி மீண்டும் ராக்கெட்

காஸாவில் இருந்து தெற்கு இஸ்ரேலுக்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் ராக்கெட் அபாய ஒலி எழுப்பப்பட்டதாவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இரானில் நிலநடுக்கம்

இரானின் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், 18 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக இரானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :