ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

14 ஐ.நா படையினர் கொலை

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில், 14 ஐ.நா படையினர் கொல்லப்பட்டது ஒரு போர் குற்றம் என ஐ.நா பொதுச் செயலாளர் விவரித்துள்ளார். கடும்போக்கு இஸ்லாமிய திவீரவாதிகள் இக்தாக்குதலை நடத்தியதாக ஐ.நா கூறியுள்ளது.

ஜெருசலேம் நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததை அடுத்து அங்கு பாலத்தீனர்கள் இரண்டாம் நாளாகப் போராடிவரும் நிலையில், காஸாவில் இருந்து ஏவப்பட்ட ஒரு ராக்கெட் தெற்கு இஸ்ரேலின் ஸ்டேராட் நகரத்தில் வெடித்தது. இந்த ராக்கெட் கார்களை சேதப்படுத்தியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

முழு கிராமமே ஏலத்திற்கு விடப்படுகிறது

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில், ஒரு கிராமம் ஏலத்திற்கு விடப்பட உள்ளது. முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஆல்வின் என்ற அந்தக் குக்கிராமத்தில் டஜன் கணக்கான கட்டடங்கள் உள்ளன. வயதான 20 பேர் மட்டுமே அங்கு வசித்து வருகின்றனர்.

"முஸ்லிம்களின் உரிமைக்கு மரியாதை தேவை''

கிரீஸ் நாட்டிற்கு ஒரு அரியப் பயணம் மேற்கொண்டுள்ள துருக்கி அதிபர் எர்துவான், கிரீஸ் நாட்டில் வசிக்கும் துருக்கி மொழி பேசும் சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்கு அதிக மரியாதை தருமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :