You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் வாழும் வெள்ளை மாளிகையிலும் எலி, கரப்பான்பூச்சி பிரச்சனை
எலி, கரப்பான் பூச்சி, எறும்பு தொல்லை மற்றும் உடைந்துபோன டாய்லர் சீட் என அமெரிக்க அதிபர் டிரம்ப வாழும் வெள்ளைமாளிகையில் டஜன் கணக்கான பிரச்சனைகள் உள்ளன என்று வெள்ளை மாளிகை ஊழியர்களால் பராமரிப்பு பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு வேலை உத்தரவு நகல்களை என்பிசி வாஷிங்டன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இதில் சில பிரச்சனைகள் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் இருந்தே தொடர்கின்றன.
வெள்ளை மாளிகையின் கடற்படை உணகத்தின் உணவு உண்ணும் பகுதியிலும், கலந்தாய்வு அறையிலும் எலிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து நூற்றுக்கணக்கண பராமரிப்பு வேலை உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகையின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அமெரிக்காவின் ஜென்ரல் சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் பிரையன் மில்லர்,'' அவை பழைய கட்டங்கள்'' என்கிறார்.
''நம்மில் யாராவது பழைய வீடு வைத்திருந்தால், பழைய வீட்டில் நிறைய வேலை செய்யவேண்டிதிருக்கும் என்பது தெரியும்''எனவும் அவர் கூறுகிறார்.
சாப்பிடும் அறைகளில் கரப்பான்பூச்சிகள் பிரச்சனையாக உள்ளன. பத்திரிகையாளர்கள் லாபி சமையலறையில் எறும்புகள் மற்றும் கரப்பான்பூச்சிகள் காணப்படுகிறது.
அத்துடன் வெள்ளை மாளிகையில் பூச்சி தாக்குதலைத் தடுக்குமாறும் உத்தரவுகள் வந்துள்ளன.
குளிர்காய நெருப்பை மூட்டும் பகுதிக்கு எதிராக உள்ள இரண்டு நாற்காலிகளின் கால்களை புதுப்பிக்குமாறு, துணை அதிபர் மைக் பென்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டாம் மாடியில் உள்ள டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பின் கிழக்கு அலுவலகத்தில் திரைச்சீலைகளை மாற்றுமாறும் பணி உத்தரவுகள் வந்துள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்