You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் இரண்டு மாதங்களில் 2000 கிலோ கஞ்சா பிடிபட்டது
சென்னைக்கு அருகில் ரப்பருக்கு நடுவில் கடத்திவரப்பட்ட 270 கஞ்சாவை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் பிடித்துள்ளனர்.
இதன் மதிப்பு 30 லட்ச ரூபாயாகும். கடந்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் 2,000 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னைக்கு அருகில் உள்ள நசரத்பேட்டையில் ரப்பர் ஏற்றிவந்த மிகப் பெரிய லாரி ஒன்றை நிறுத்தி போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையிட்டபோது, ரப்பருக்கு நடுவில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 270 கிலோ உலர்ந்த கஞ்சா இருப்பதைக் கண்டறிந்து அதனைப் பறிமுதல் செய்தனர்.
இதன் சந்தை மதிப்பு 30 லட்ச ரூபாய் என காவல்துறை தெரிவிக்கிறது. அந்த சரக்கு வாகனமும் அதில் இருந்த ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்பிலான ரப்பரும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூன்று பேரைக் காவல்துறைக் கைதுசெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் மட்டும் 2,000 கிலோ அளவுக்கு உலர் கஞ்சாவை பிடித்துள்ளன. இவற்றைக் கடத்திவந்த 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் 325 பேர் கைதுசெய்யப்பட்டு, வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்