சீனா: ரகசிய வங்கி நடத்திய 7 பேர் கைது

மூன்று பில்லியன் டாலருக்கு மேலான மதிப்புடைய ரகசிய வங்கி ஒன்றை நடத்தியதாக கருதப்படும் 7 நபர்களை சீனாவின் தென் பகுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சீன நிப்பரப்பில் பாதிக்கும் மேலாகபரவியுள்ள, 10,000 பேர் ஈடுபட்டுள்ள வங்கி நடவடிக்கையைப் பிடிப்பதற்கு எடுத்த நடவடிக்கையில், குவாங்தொங் மாகாணத்திலுள்ள சந்தேகத்திற்குரிய வங்கி கணக்கு ஒன்றை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஓரளவு வெளியுலகத் தொடர்பற்ற சீனாவின் வங்கி அமைப்பிற்கு அப்பாற்பட்டு தனிநபர்கள் சீனாவுக்கு வெளியே பணம் அனுப்புவதற்கு அல்லது பாரம்பரிய வங்கிகளால் மறுக்கப்படும் கடனுதவியைப் பெறுவதற்கு உருவாகியுள்ள சட்டப்பூர்வமற்ற வங்கி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு சீன அரசு முயன்று வருகிறது.

சீன பெருநிலப்பகுதிக்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான அந்நிய செலாவணி மதிப்பில் உள்ள வித்தியாசங்களில் இருந்து லாபம் அடைந்ததாக குவாங்தொங்கை சேர்ந்த இந்த சந்தேக நபர்கள் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :