You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரு பாலின திருமணத்துக்கு ஆஸ்திரேலிய மக்கள் அமோக ஆதரவு
ஆஸ்திரேலியாவில், ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமானதாக்குவதற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்கக் கருத்துக் கணிப்பில், தபால் ஓட்டுகளில் 61.6% மக்கள் ஒரு பாலுறவு திருமணங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன் ஆதரவாளர்கள், பொது இடங்களில் வானவில் நிறக் கொடிகளை அசைத்தும், ஆடி பாடியும் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்த சட்டத்தை மாற்ற நடைபெற்ற நீண்ட விவாதத்திற்கு பிறகு, அஞ்சல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது
கிறிஸ்துமஸுக்கு பிறகு சட்டம்:
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது அரசு, பாராளுமன்றத்தில் இதற்கான சட்டத்தை இயற்ற உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
முடிவுகள் அறிவித்த பிறகு பேசிய டர்ன்புல், "இது குறித்து பேசி வந்த லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்கள், தற்போது திருமண சமத்துவத்துக்கு மிகப் பெரிய அளவில் வாக்களித்துள்ளனர்" என்றார்.
நேர்மைக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் காதலுக்காகவும் அவர்கள் இந்த வாக்குகளை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது வெளிவந்துள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளால், நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்