You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிச்சடி சர்ச்சை: யாருக்கு எது பாரம்பரிய உணவு?
மத்திய அரசு டெல்லியில் நடத்தும், சர்வதேச இந்திய உணவுத் திருவிழா 2017-இல் 800 கிலோ கிச்சடி சமைக்கப்படும் என்ற தகவல் வெளியானதும், கிச்சடி இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியானது.
அப்படி திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும், உலக சாதனை முயற்சியாக மட்டுமே 800 கிலோ கிச்சடி சமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷ்மிரத் கௌர் பாதல் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆனால், அதற்கு முன்னரே கிச்சடி குறித்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் 'சமைக்கப்பட்டு'விட்டன.
"கிச்சடியை தேசியப் பாரம்பரிய உணவாக அறிவிக்கும் திட்டம் பாரம்பரியத்தை கொண்டாடுவதா? ஒற்றைப் பண்பாட்டை திணிப்பதா?" என்று வாதம் - விவாதம் பகுதியில் பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவு செய்த கருத்துக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை இதோ.
"இன்றைக்கு எங்களது இந்தியாவும் இந்திய மக்களும் உள்ள நிலையினை கருத்தில் கொண்டவன், பழைய சோற்றையே தேசிய உணவாக அறிவிப்பான்.... காரணம் வறுமைக் கோடு நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறதே...!!!" என்பது சாவத் மெஸ்ஸி எனும் பிபிசி நேயரின் கருத்து.
'தமிழன் தமிழன்' எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்,இவ்வாறு கூறுகிறார், "அப்படியே குடிக்கிறதுக்கும் (மாட்டு மூத்திரத்தையும்) தேசிய குடிநீராக அறிவித்து விடுங்கள். அதற்கு செலவு செய்து விளம்பரம் செய்ய வேண்டாம்.
"ஏன் இட்லி தோசை தென்னிந்திய உணவு சப்பாத்தி வடஇந்தியாவில் அதிகம்
அதனால் இந்தியா இரண்டு உணவு தேர்வு செய்ய வேண்டும்," என்பது அன்பழகன் அன்பு எனும் பதிவரின் கருத்து.
"பிரியாணிணு சொன்னா அண்டாவோட ஆட்டைய போட ஒரு கும்பல் இருக்குனு பயந்து போய் கிச்சடினு சொன்னா மட்டும் சட்டியோட தூக்க மாட்டானுங்கலாடா என்னங்கடா உங்க தேசிய உணவு," என்று எள்ளலாக பதிவிட்டுள்ளார் ரம்ஜான் அலி எனும் நேயர்.
"நீங்க கிச்சடிய உணவு சின்னமா வெப்பிங்களோ இல்ல இடியாப்பத்தை சின்னமா வெப்பிங்களோ முதல்ல எல்லோருக்கும் ஒரு வேளை உணவு கிடைக்க முயற்சி செய்யுங்க," என்று கூறியிருப்பவர் செஞ்சு பாபு எனும் பயன்பாட்டாளர்.
"இன்று நான் என்ன சாப்பிடுறேனோ அதுவே எனது தேசிய உணவு சொல்பவர் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்," என்று கூறியுள்ளார் அன்பரசன்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்