You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிட்லரை நேசித்த சாவித்ரி தேவியின் சித்தாந்தங்கள்
சாவித்ரி தேவி - ஹிட்லர் மீது ஆர்வம் கொண்டவர், பூனைகளை அதிகம் நேசிப்பவர், ஆரிய கட்டுக்கதைகளை நம்புபவர். அவர் மறைந்து 25ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவரின் சிந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்துவங்கி இருந்தன.
ஆனால், வலதுசாரிகள் முன்னேறி வரும் நிலையில், அவரின் பெயரும், புகைப்படமும் மீண்டும் இணையதளங்களில் அதிகம் வலம்வர துவங்கியுள்ளது என்கிறார் மரியா மார்கரோனிஸ்.
இது குறித்து அவர் மேலும் விளக்கமாக எழுதியுள்ளார்.
2012ஆம் ஆண்டு, நான் எழுதும் ஒரு கட்டுரைக்காக, கிரீஸின் தங்க விடியல் கட்சியின் இணையதளத்தில் தேடிக்கொண்டு இருந்த போது, நீல நிற புடவை அணிந்த பெண் ஒருவர், ஹிட்லரின் மார்பளவு புகைப்படத்தை, ஒரு சூரிய அஸ்தமன பகுதியில் இருந்து பார்ப்பது போன்ற புகைப்படத்தை பார்த்து தடுமாறிவிட்டேன்.
கிரீஸில் இருந்து வெளிநாட்டவர்களை அகற்றும் ஒரு வெளிப்படையான இனவெறி கட்சியின் தளத்தில், இந்த இந்து பெண்னின் புகைப்படம் என்ன செய்கிறது? ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள வலதுசாரி அரசியல்வாதிகள்,`சாவித்ரி தேவியின்` என்ற பெயரை மக்கள் முன் மீண்டும் வைக்கும் வரை, அவரை, என் மூளையில் உள்ள ஒரு ஆர்வமான விஷயமாக தான் பார்த்தேன்.
நாசிக்களுக்கு ஆதரவான இணையதளங்களில், சாவித்ரி தேவி குறித்த கலந்துரையாடல்களை பார்ப்பது, சமீபமாக காலமாக நிறைய நடக்கிறது. அதிலும் குறிப்பாக அவரின் `தி லைட்டினிங் அண்ட் தி சன்`, இதில், ஹிட்லர், இந்து கடவுளான விஷ்ணுவின் அவதாரம் என்று சித்தரிப்பது. `கோல்ட் இன் தி ஃபர்னஸ்`, என்னும் புத்தகம், தேசிய அளவிலான சோசியலிசம் மீண்டும் மேலெழும்பும் என்பதை நம்ப வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
அமெரிக்காவின் தீவிர வலதுசாரி இணையதளமான `கவுண்டர் கரண்ட்` இவரின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த இணையதள காப்பகத்தை அளிக்கிறது.
அவரின் பார்வைகள் பெரிய அளவிலான பார்வையாளர்களை சென்று சேர்கிறது. 20ஆம் நூற்றாண்டில், பிற பாசிச மக்களோடு, சாவித்ரி எடுத்து சென்ற நல்லது மற்றும் கெட்டதிற்கு இடையிலான சண்டையை, தற்போது அவரின் வாழ்க்கையில் இருந்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என வலதுசாரி தலைவர்களால் எடுத்து செல்லப்படுகிறது.
டிரம்பின் முன்னாள் உத்தியியலாளர் ஸ்டீவ் பான்ன், ரிச்சர்ட் ஸ்பென்சர் உள்ளிட்டோருக்கே இதற்கான நன்றிகள் சென்று சேர வேண்டும்.
சில மெட்டல் இசைக்குழுக்கள் மற்றும் அமெரிக்காவின் வலதுசாரி ரேடியோ அரங்கங்கள் கூட, இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் இருண்ட காலமான கலியுகம் குறித்து பேசுகின்றன. இத்தகைய இருண்ட காலத்திற்கு ஹிட்லர் முடிவு கட்டுவார் என சாவித்ரி தேவி நம்பினார்.
யார் இந்த சாவித்ரி தேவி? அவரின் எண்ணங்கள் ஏன் இப்போது மீண்டும் உயிர்பெறுகின்றன? 1906ஆம் ஆண்டு, ஆங்கில அன்னைக்கும், கிரேக்க- இத்தாலிய தந்தைக்கும் லீயாங் என்ற இடத்தில், மாக்ஸிமியானி போர்டாஸ் என்ற பெயரில் பிறந்தார்.
இளம்வயது முதலே,சமத்துவத்தின் அத்தனை வடிவங்களையும் அவர் எதிர்த்தார். 1979ஆம் ஆண்டு, ஏர்ன்ஸ்ட் ஸ்டூண்டல் என்னும் ஹாலோகாஸ்ட் மறுப்பாளர் அனுப்பி வைத்த ஒரு நேர்காணலாளரிடம் , `ஒரு அழகான பெண், அசிங்கமான பெண்ணிற்கு சமமாக மாட்டாள்` என்றார்.
முதலாம் உலக போரின் இறுதியில், கிரேக்கத்தில் நடந்த ராணுவ பிரச்சாரத்தின் வெளிப்பாட்டால் ஆயிரக்கணக்கான அகதிகள் இடம் மாறிக்கொண்டு இருந்த அதே நேரத்தில், 1923ஆம் ஆண்டு ஏதென்ஸிற்கு வந்தார் சாவித்ரி தேவி.
கிரீஸின் அவமானத்திற்கு, மேற்கத்திய கூட்டாளிகளே காரணம் என கூறிய அவர், வெர்சாய் உடன்படிக்கையால், ஜெர்மனி மீது திணிக்கப்பட்ட தண்டனை நியாயமற்றது என அவர் பார்த்தார்.
சாவித்ரியின் மூளையில், கிரீஸ் மற்றும் ஜெர்மனி இரண்டுமே, மக்களை ஒன்றிணைக்க முறையான ஆர்வத்தை காட்டி, மறுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற பார்வையே இருந்தது. அந்த பார்வை, பைபிளில் தான் படித்ததாக அவர் கூறிக்கொள்ளும், யூதர்களுக்கு எதிரான அவரின் எண்ணங்களோடு இணைந்து, அவர் தன்னை தானே தேசிய சோசியலிசவாதியாக அடையாளம் செய்துகொள்ள வைத்தது.
ஹிட்லர் ஒரு வெற்றியாளர், ஆனால், ஐரோப்பாவில் யூதர்களை அழித்து, `ஆரிய இனத்தை` மீண்டும் அதற்கே உரியதான இடத்தில் அமரச்செய்ய வேண்டும் என்ற அவரின் எண்ண்மே, ஹிட்லரை தனக்கும் தலைவன் ஆக்கியதாக அவர் கூறியுள்ளார்.
18ஆம் நூற்றாண்டுகளில் இருந்து, யூதர்களை எதிர்ப்பார்கள் கூறும் பழியை இவரும் கூறினார். கிரீஸ் மற்றும் ஆரியர்களில் பண்டைய கற்பனையுலகு அழிவதற்கு யூத கிருஸ்துவர்களே காரணம் என்றார். 1930களின் துவக்கத்தில், இந்தியாவிற்கு பயணித்த அவர், ஐரோப்பாவின் பாகன் மக்களின் வாழ்வியலை தேடி சென்றார்.
சாதியினர்களுக்கு இடையே கலப்பு திருமணம் செய்யாமல் இருப்பதே, சுத்தமான ஆரிய இனத்தை பாதுகாத்து வருவதாக, தன்னை தானே சமாதானம் செய்துகொண்டார்.
ஒரு ஐரோப்பிய பெண், ரயிலில் நான்காம் வகுப்பில் பயணிப்பது என்பது, எங்கும் காணமுடியாத விஷயம் என்பதால், ஆங்கிலேய அதிகாரிகளின் கவனத்தின் கீழ் அவர் வைக்கப்பட்டார். ஜப்பானியர்களுக்கு அளிப்பதற்காக, ஆங்கிலேயர்களிடம் இருந்து தகவல்களை எடுத்தேன் என அவர் தகவல் அளிக்கும் வரை,
அவருக்கு ஆங்கிலேயர்களுடன் பெரியதாக எந்த பணியும் இல்லை. அவர் இந்திய மொழிகளை கற்றார், பிராமணரை திருமணம் செய்துகொண்டார் (தன்னைப்போல, அவர் ஆரியர் என அவர் நம்பினார்). நாசிகளின் சிந்தனை மற்றும் இந்து கட்டுக்கதைகளை சேர்த்து, `ஹிட்லர் காலங்களுக்கு அப்பாற்பட்டவர்` என்றும், கலியுகத்தை முடிக்க வந்தவர் என்றும், ஆரிய மேலாதிக்கத்தை கொண்டுவரக்கூடிய பொன்னான காலம் வரும் என அவர் எண்ணினார்.
1930களில், இந்து மிஷனில் பணியாற்றி வந்தார். அப்போது, இந்து தேசியவாத பிரச்சாரத்தை எடுத்து செல்லும் மையமாக அது இருந்தது. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்திய மதவாத குழுக்கள், இந்துத்துவ அமைப்புகள் வளர உதவின. அதுவே, இந்துக்களை ஆரியர்களை உண்மையான வாரிசுகள் என்றும், இந்தியா ஒரு இந்து நாடு என்றும் வலியுறுத்தியது.
அந்த அமைப்பின் தலைவரான ஸ்வாமி சத்யநந்தாவின் கீழ், அவர் பணியாற்றினார். அவரும் ஹிட்லர் மீது ஆர்வம் கொண்டு இருந்தது மட்டுமில்லாமல், இந்து அடையாளங்கள் குறித்து பேசும் போது அதில் நாசிக்களின் பிரச்சாரத்தையும் சேர்த்துகொள்ள அனுமதித்தார்.
அவர் இந்தியிலும், வங்க மொழியிலும், ஆரியர்களின் பண்புகள் குறித்து பேசியதோடு, மெயின் காம்ஃப் புத்தகத்தில் உள்ள வசனங்களையும் பயன்படுத்தினார்.
மூன்றாம் ரெயிச்சின் வீழ்ச்சியை தொடர்ந்து, 1945 இல் ஐரோப்பா சென்ற அவர், அதை மீண்டும் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டார். பூனைகளின் மீது விருப்பம் கொண்ட நாசி பெண் என்ற ஒப்பனைகளை விளக்கக்கூடிய, தன்னை போன்ற ஒரு கதாபாத்திரம் இங்கிலாந்தில் வந்து இறங்குவது போல, தனது `லாங் விஸ்கர் அண்ட் தி டூ லெக்கிட் காடஸ்` என்ற புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.
மனிதர்களை விட, விலங்குகளையே சாவித்ரி அதிகம் விரும்பினார். ஹிட்லரை போலவே, அவரும் வாழ்நாள் முழுவதும் சைவ உணவு மட்டுமே உண்டார். தூரமான பகுதியில் இருந்து வந்தவர் போல பூமியை பார்த்த அவர், மனித உயிர்களை விட, இயற்கையின் முறையை அதிகம் கவனித்தார்.
ஐஸ்லாந்திற்கு பயணித்த அவர், ஹெக்லா மலை வெடிப்பதை அங்கு இரு இரவுகள் தங்கி இருந்து பார்த்தார். `உருவாக்கங்களில் ஒலி என்பது அம்` என குறிப்பிட்ட அவர்,`அந்த மலை அம்! அம்! ` என்று ஒலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
1948இல், ஜெர்மனியினுள் நுழைந்துவிட்ட சாவித்ரி தேவி, ` ஒரு நாள் நாம் மீண்டும் வளருவோம், மீண்டும் வெற்றி கொள்வோம், நம்பிக்கையோடு காத்திருங்கள்! ஹிட்லர் வாழ்க!` என்ற துண்டு பிரசூரத்தை விநியோகித்தார்.
பிற்காலத்தில் பேசுகையில், ஆங்கிலேய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை நினைத்து மகிழ்வதாக கூறிய அவர், அது தன்னை, சிறையில் உள்ள தங்களின் தோழர்களோடு, நெருங்க செய்தது என்றார். அவரின் குறுகிய சிறைவாசத்தின் போது, அவர், போர் குற்றவாளியான, பெல்சன் காவலாளி ஒருவருக்கு நெருங்கிய நண்பர் ஆனார்.
சாவித்ரியின் பாலினம் குறித்து பல கருத்துக்கள் உள்ளன. அஷித் முகர்ஜியுடன் அவர் திருமணம் என்பது பிரம்மச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. காரணம் அவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். நாசிகளுக்கு பனானிசியராக இருந்த ஃப்ரான்ஸ்வாஸ் டியோர், அவரின் காதலர் என கூறப்படுகிறது.
பிற்காலத்தில், இந்தியா திரும்பிய சாவித்ரி தேவி, தனது வீட்டிலேயே நாட்களை கழித்தார். வீட்டின் அருகில் உள்ள பூனைகளுக்கு காலையில் பால் அளிப்பதற்கு, திருமணமான இந்து பெண்போல தங்க நகைகளை அணிந்து செல்வார்.
1982ஆம் ஆண்டு, தனது நண்பரின் வீட்டில், இங்கிலாந்தில் அவர் உயிரிழந்தார். முழு பாசிச மரியாதையோ அவரின் அஸ்தி, அமெரிக்க நாசி தலைவரான ஜார்ஜ் லிங்கன் ராக்வெல்லின் சமாதிக்கு பக்கத்தில் வைக்கப்பட்டது.
சாவித்ரி தேவியை கிட்டத்தட்ட இந்தியா மறந்துவிட்ட நிலையில், அவர் மக்களிடம் கொண்டு சென்ற இந்து தேசியவாத கருத்துக்கள், தற்போது வல்லமை பெற்று வருவது, கவலையளிப்பதாக கூறுகிறார், அவரின் மருமகனும், இடதுசாரி செய்தியாளருமான சுமந்த் பானர்ஜி.
`1939ஆம் ஆண்டு, அவர் எழுதிய, `இந்துக்களுக்கு ஒரு எச்சரிக்கை` என்ற புத்தகத்தில், இது நாட்டை சுற்றி, சரியாக கட்டமைக்கப்பட்ட ஒரு எதிர்ப்பு உணர்வை இந்துகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார். இந்த எதிர்ப்பின் இலக்கு இஸ்லாமியர்கள். அவரை பொருத்த வரையில், இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் என அவர் நினைத்தார். அந்த பயம் தற்போது மீண்டும் எதிரொலிக்க துவங்கியுள்ளது` என்கிறார் சுமந்த்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின், முறையான கொள்கையாக ஹிந்துத்துவா உள்ளது.இந்த சித்தாந்தம், இஸ்லாமியர்களும், மதசார்பற்றவர்களும் இந்து நாட்டின் வலிமையை உணரவில்லை என்கிறது.
அக்கட்சியின் செய்திதொடர்பாளர் வன்முறைக்கு கண்டனம் ஹெரிவித்தாலும், 1992இல் நடந்த பாபர் மசூதி கலவரம், தற்போது நடக்கும் தாக்குதல்கள் ஆகியவை வேறு மாதிரியாகவே கூறுகின்றன.
அமெரிக்காவை பொருத்தவரையில், நாசிக்கள் மற்றும் இந்து தீர்க்கதரிசனங்களை கொண்டு வலதுசாரிகள் நக்கலடிக்க தளம் அமைத்து கொடுக்க ஒன்றுமையோடு செயல்பட்டவை, இனவெறி, கம்யூனிஸத்திற்கு எதிரான பார்வை, கிருஸ்துவ அடிப்படைவாத கருத்துக்களும் தான்.
இந்தியாவை பொருத்தவரையில், பாரம்பரியமாக நாட்டில் ஆட்சி செய்யும் கட்சிக்கு தோல்வி குறித்து வரும் பயமே, இத்தகைய நேர்த்தியான ஆளெடுப்பிற்கு காரணம்.
`ஒபாமாவின் ஆட்சியின் மத்தியில், தேநீர் விருந்துகளில் பங்கேற்றவர்கள், வெள்ளையர்கள் ஓரம்கட்டப்படுவதாக நினைத்தனர்` என்கிறார் ஆராய்ச்சியாளரும், எழுத்தாலருமான சிப் பெர்லட். `அமெரிக்காவில் உள்ள வெள்ளையர்கள் இடமாற்றம் மற்றும் அவமானப்படுத்தப்படலாம் என்ற பயம், தீவிர வலது மற்றும் கட்டமைக்கப்பட்ட வெள்ளை இன மேலாதிக்க சூழ்நிலையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது` என்கிறார் அவர்.
சாவித்ரி தேவியின் பணிகள் என்பது, இந்திய ஹிந்து தேசியவாதிகள், ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கவின் தீவிர வலதுசாரிகளின் வரலாற்றில் இடம்பெற்றூள்ளது. அவரின் அலங்காரமான வார்த்தைகள், எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், `இனங்களாக` மனிதர்கள் பிரிக்கப்படலாம்,
அவர்கள் தனியாகவே வைக்கப்பட வேண்டும். மற்றவர்களை விட, குறிப்பிட்ட சில பிரிவுகளுகள் மேன்மையானவை என கூறுகின்றன. இந்த மேன்மையான குழுக்கள் தற்போது ஆபத்தில் உள்ளன. அவை மீண்டும் சக்திபீடத்திற்கு வந்தால், இருண்ட காலம் போய், பொற்காலம் திரும்பும் என்கிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :