மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் அஸ்தியைப் புனிதப்படுத்தும் தாய்லாந்து!

ஓராண்டுக்கு முன்பு இறந்த தாய்லாந்து மன்னர் பூமிபோன் அடூன்யடேட்டின் இறுதிச்சடங்கின் கடைசி நிகழ்வு பாங்காகில் நடைபெற்றது.

மன்னரின் சாம்பல் இரண்டு அரச கோயில்களிலும், கடந்த அக்டோபர் மாதம் 88 வயதில் அவர் இறக்கும் வரை வசித்த பிரம்மாண்ட அரண்மனையிலும் வைக்கப்பட்டுப் புனிதப்படுத்தப்பட்டது.

70 ஆண்டுகளுக்கு மேலாக தாய்லாந்தை ஆட்சி செய்த மன்னர் பூமிபோனுக்கு வியாழக்கிழமையன்று நூற்றுக்கணக்கான மக்கள் சாலைகளில் வரிசையில் நின்று தங்களது கடைசி அஞ்சலியைச் செலுத்தினர்.

மன்னருக்கான ஓராண்டு அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிய உள்ளது.

அதாவது, அஞ்சலி செலுத்துபவர்கள் தங்களது கருப்பு ஆடைகளைத் துறந்து, பழுப்பு மற்றும் நீள நிற ஆடைகளை அணியலாம். அரசாங்க அலுவலகங்களிலும், வீடுகளிலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான அலங்காரங்கள் அகற்றப்படலாம்.

ஐந்து நாள் இறுதிச்சடங்கு கடந்த புதன்கிழமையன்று தொடங்கியது. வியாழக்கிழமையன்று மன்னர் பூமிபோனின் உடலுக்கு, அவரின் மகனும், அடுத்த மன்னருமான மகா வஜ்ரலாங்கோர்ன் எரியூட்டினார்.

அரண்மனையில் வைத்துப் புனிதப்படுத்துவதற்காக தனது தந்தையின் சாம்பலில் சிலவற்றை மகா வஜ்ரலாங்கோர்ன் சேகரித்துக்கொண்டார்.

பல்வேறு அரசியல் கொந்தளிப்புகளையும், காட்சிகளையும் பார்த்த தாய்லாந்துக்கு, ஒரு நிலைத்தன்மை வழங்குபவராக மன்னர் பார்க்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டு, அக்டோபர் 13ஆம் தேதி மன்னர் மரணித்தது முதல், ஒரு ஆண்டிற்கு, அந்நாடு துக்கம் அனுசரித்தது. பலரும் கருப்பு நிற ஆடையையே அணிந்தனர்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :