மனிதருடன் பேச முகபாவங்களை பயன்படுத்தும் நாய்கள் - ஆய்வு

நாய்கள் முன்னர் நினைத்ததை விடவும் அவற்றின் முகபாவங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும், மேலும் மனிதர்களுடன் பேசுவதற்காக முகபாவங்களை அவை பயன்படுத்துகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்கள் தங்கள்மீது கவனம் செலுத்தும்போது, நாய்கள் தங்கள் முகங்களை அடிக்கடி அசைக்கின்றன., மேலும், உற்சாகத்தில் இருக்கும் போதோ அல்லது உணவுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போதோ அவை இவ்வாறு செய்யவில்லை என்று அந்த ஆய்வு கூறுகின்றது.

நாய்கள் மனித உணர்ச்சிகளைப் பற்றி அறிந்திருக்கின்றனவா என்பதை பற்றி நாம் அறிந்திருக்கமாட்டோம். ஆனால் அவற்றின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு அவை முகபாவங்களைப் பயன்படுத்துகின்றன என்று போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :