You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாடல் கொலை வழக்கு: பாகிஸ்தானில் மதகுரு கைது
பாகிஸ்தானில் சமூக வலைதள பிரபலம் கண்டீல் பலோச் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், பிரபல இஸ்லாமிய மதகுரு முஃப்தி அப்துல் காவி கைது செய்யப்பட்டுள்ளார். கண்டீலின் கொலை பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
எதிரெதிர் விமர்சனங்களை பெற்ற, உணர்வுகளைத் தூண்டும் வகையிலான செல்ஃபி படங்களை இணையத்தில் பதிவேற்றியதன் மூலம் அவர் புகழ் வெளிச்சம் பெற்றார்.
முல்தானில் உள்ள அவரது இல்லத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சடலமாக அவர் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது சகோதரர் முஹமத் வசீம் அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் முஃப்தி அப்துல் காவியுடன் ஹோட்டல் அறையில், அவரின் குல்லாவை அணிந்துகொண்டு, உதடுகள் விரிந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை கண்டீல் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர் அவர் முறையற்று நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
பிற செய்திகள்
- 27 ஆண்டுகளுக்கு பிறகு இராக்கிற்கு சௌதி விமான சேவை
- குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக்
- அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற கென்ய தேர்தல் அதிகாரி
- வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்
- 8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்