You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
12,000 டாலருக்கு ஏலம்போன சர்ச்சில் புகைத்த சுருட்டுத்துண்டு
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முன்பு புகைத்த ஒரு சுருட்டுத்துண்டு சுமார் 12,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாக போஸ்டனை மையாக கொண்டு இயங்கும் ஆர் ஆர் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது இந்திய மதிப்பில் சுமார் 7.76 லட்ச ரூபாய் ஆகும்.
1947 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பாரிஸில் உள்ள ல பொர்ஷே விமான நிலையத்திலில் சர்ச்சில் இருந்தபோது, இந்த சுருட்டை புகைத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு ஃபுளோரிடாவின் பால்ம் பீச்சை சேர்ந்த ஒரு சேகரிப்பாளருக்கு இந்த சுருட்டு விற்கப்பட்டது. சேகரிப்பாளரின் பெயர் வெளியிடப்படவில்லை.
பாதி புகைக்கப்பட்ட சர்ச்சலின் சுருட்டை பிரிட்டனை சேர்ந்த ஒரு விமானப் பணியாளர் வைத்திருந்தார். அவர், சர்ச்சில் மற்றும் அவரது மனைவியை பாரிஸிலிருந்து அழைத்து சென்று, திரும்ப அழைத்துவந்தார்.
சுருட்டில் வின்ஸ்டன் சர்ச்சிலின் முழுப்பெயர் இடம்பெற்றிருக்க அதன் அருகே ஒரு சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான லா கோரோனா என்ற சுருட்டு நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றிருக்கும். ராணுவ அதிகாரி கார்ப்பொரல் ஆலன் டர்னர் கியூபா நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த சுருட்டை பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.
சர்ச்சிலின் சுருட்டுடன் விமான பணியாளர் எடுத்திருந்த புகைப்படமும் இருந்தது. '1947 ஆம் ஆண்டு மே11 அன்று நார்ஹோல்டிற்கு பறப்பதற்குமுன், லா பொர்ஷே விமான நிலையத்தில் யோர்க் எம்டபிள்யு101 விமானத்தின் வாயிற்படியிலிருந்தபடி நான் எடுத்த புகைப்படம்,'' என்று அதில் பென்சிலால் எழுதப்பட்ட ஒரு சிறுகுறிப்பு இடம்பெற்றிருந்தது.
ஆர் ஆர் ஏல நிறுவனத்தின் துணைத் தலைவரான பாபி லிவிங்ஸ்டன், ''இந்த பொருள் சர்ச்சிலின் தனித்துவமான அடையாளத்தின் மிக நெருக்கமாக தொடர்புடையது'' என்றார்.
2015 ஆம் ஆண்டில், பிரிட்டனில் உள்ள ஒரு ஏல நிறுவனம், சர்ச்சில் பயன்படுத்திய மெல்லப்பட்ட சுருட்டுத்துண்டை சுமார் 2,000 பவுண்டுகளுக்கு விற்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :