இஸ்லாத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயல்: மலேசிய சுல்தான்கள் கவலை

பட மூலாதாரம், The Malaysian Insight/Hasnoor Hussain
நாட்டில் இஸ்லாத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் செயல்கள் நடப்பது குறித்து மலேசியாவில் உள்ள ஒன்பது அரச சுல்தான்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிறித்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் இந்து சிறுபான்மையினர் மீது சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவது பற்றிய அச்சங்கள் அதிகரித்து வரும் நிலையில் மலேசியாவிலுள்ள தனி மாகாணங்களுக்கு பெயரளவுக்கு தலைமை வகிக்கும் இந்த ஆட்சியாளர்கள் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்துக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் இரண்டு மாகாணங்களிலுள்ள பொது சலவை இயந்திர சேவை நிறுவனங்கள் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களை தடை செய்தன.
அவர்களது செயல்களுக்கு இந்த சுல்தான்கள் கண்டனம் தெரிவித்த பிறகு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்க ஒப்புக்கொண்டனர்.
இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் மற்றவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என ஆட்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். (மலேசியாவில் 60%க்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
பிற செய்திகள்
- இவர்தான் அமித் ஷா மகனுக்காக ஆஜராகப் போகும் அரசு வழக்கறிஞர்
- இலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள்: அறுவடை செய்யப்பட்டதா அமைதி?
- `சே' குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன? மனம் திறக்கும் மகன்
- தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைந்தாரா அமித் ஷா மகன்?
- நாங்கள் பள்ளிக்குச் செல்வது எப்படி? 360 டிகிரி மெய்நிகர் காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








