அறியாமையால் பாலியல் செயல்களோடு வளரும் பள்ளி மாணவியர்

பட மூலாதாரம், Scott Barbour
பாலியல் பற்றி அறிந்துகொள்ள ஆபாச படங்களை குழந்தைகள் பார்க்கிறார்களா? மாணவியர் பிற்காலத்தில் வருந்தக்கூடிய செயல்களை செய்வதற்கு மாணவர்கள் நிர்பந்திக்கிறார்களா?
தன்னுடைய பதின்ம வயதான மாணவ மாணவியரிடம் இருந்து கேட்ட விடயங்களால் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக 24 வயதுடைய மேனிலை பள்ளி ஆசிரியை பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை: ஆசிரியரே கூறுவதுபோல எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை வெளிப்படையான மொழியில் அமைந்துள்ளது.
பாலியல் மற்றும் பாலியல் செயல்களை விவாதிப்பதற்கு மாணவர்கள் பயன்படுத்துகின்ற மொழி இழிவானதாக உள்ளது. சம்மதம் மற்றும் பொருளுள்ள பாலுறவை மேற்கொள்ளுவதற்கு உண்மையான பரஸ்பர மரியாதை தேவை என்ற புரிதல் இல்லாததை இது காட்டுகிறது.
அதேபோல, மாணவியர் தங்களுடைய உடலுக்கே மதிப்பு கொடுக்காமல் இருக்க கற்றுக்கொடுக்கப் பட்டுள்ளதோடு, தாங்கள் பயன்படுத்தப்படலாம் என்கிற புரிதலும் அவர்களிடம் இல்லை.

ஒருமுறை 14 வயது மாணவி மிகவும் வேதனையடைந்து, என்னிடம் வந்து "நான் அவனுடைய ஆண்குறியை நக்கியுள்ளேன். ஆனால், அவன் என்னை காதலிக்கவில்லை. அவன் என்னிடம் காதலிப்பதாக கூறினாலும், உண்மையில் காதலிக்கவில்லை" என்று கூறினார்
இந்த மாணவியர் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று நான் சிந்திக்க தொடங்குவதற்கு இது மிக முக்கிய விடயமாக அமைந்தது.
14 அல்லது 16 வயதிலுள்ள ஒரு சிறுமி பாலுறவு மேற்கொண்டு மகிழ்ச்சியடைந்துவிட்டதாக யாரும் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன் - அவர்கள் இவ்வாறுதான் செயல்படுகிறார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் இணங்கி விடுகின்றனர். குறிப்பாக பிரபல மாணவனாக இருந்தால் தாங்கள் தெரிவு செய்யப்பட்டதை ஏறக்குறைய பெருமையாக மாணவியர் கருதுகிறார்கள். இதனை கிட்டதட்ட தங்களின் தோற்றம் மற்றும் கவர்ச்சியை அளவிட்டு கொள்வதுபோலவோ, அல்லது தங்களுடைய பெருமை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
தாங்கள் பாதிக்கப்படுவது இந்த மாணவியருக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. 14 வயதுக்கு மேலான மாணவியர், ஆம், நான் இதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்று பின்னால் நினைத்து பார்க்கின்றனர்.
அறியாமையால் இந்த மாணவியர் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பின்னர் அதிலே அவர்கள் ஆழமாக செயல்பட தொடங்குகிறார்கள்.
"முடியாது" என்று சொல்வதற்கான உரிமை
தங்களை பொருட்களாக மாணவர் பயன்படுத்தியுள்ளதை இந்த மாணவியர் உணர செய்ய வேண்டும். இத்தகைய விடயங்களில் பாதிக்கப்படுவோராக அவர்களே இருப்பதை உணர செய்ய வேண்டும்.
"முடியாது" என்று சொல்வது மாணவியரின் உரிமை. தங்களுடைய சரியிணையான வயதினர் அழுத்தம் கொடுப்பதாக யாரும் உணரக்கூடாது.
ஒரு மாணவன் உங்களுடைய புகைப்படத்தை விரும்பாமல் இருக்கலாம் அல்லது நீ கவர்ச்சியாக இல்லை என்று உன்னோடு பழகாமல் இருக்கலாம்.

மாணவர்கள் தங்களை பற்றி என்ன நினைக்கிறர்கள் என்பதன் மூலம் மாணவியர் பெருமையடைவது காதல் விவகாரத்தில் மிகவும் மோசமான நிலை.
உன்னை பாலியல் ஆர்வத்தோடு பார்க்க ஒரு மாணவர் கூட இல்லாததை போல இது மோசமானது. 15 வயதினர் பார்வையில் சென்னால், இது தொடர்ந்து புகைப்படங்களை கேட்டு தொல்லைக்குட்படுத்துவது போன்றது.
இந்த விடயத்தில் மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள். யாரை செல்வாக்கை செலுத்தி காரியம் சாதிக்க முடியுமோ அவர்களையே மாணவர்கள் நாடி போகிறார்கள். ஆனால், எல்லா மாணவர்களும் அப்படியல்ல.
பாலுறுப்பிலுள்ள முடியை மழித்தல்
இடைவேளை நேர பணியாற்றி கொண்டிருந்தபோது, ஒரு மாணவர் சொல்வதை கேட்டேன். 'நான் என்னுடைய கையை அவளுடைய பேன்டில் போட்டேன். அதுவொரு காடுபோல இருந்தது. உடனடியாக கையை எடுத்துவிட்டேன்' என்று அவன் கூறினான்.
மாணவியர் மத்தியில் மொத்தத்தில் வெளியே பேசப்படாத விதியாக பாலுறுப்பிலுள்ள முடி முழுவதையும் மழித்து கொள்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய நியதியாக உள்ளது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் பாலுறுப்பில் முடி இல்லை என்பது ஆபாசமான விடயம். அவ்வாறு இல்லை என்று நீங்கள் கூற முடியாது என்று எண்ணுகிறேன்.
இந்த முடியை சரியாக மழிக்காவிட்டால், தங்களுடைய உடல் நலத்தை அவர்கள் ஆபத்திற்கு உட்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, பழைய அல்லது ஏற்கெனவே பயன்படுத்திய பிளேடை பயன்படுத்தினால், நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அவர்கள் அதிகரிக்கக்கூடும்.
ஆபாசங்களில் இருந்து கற்றல்
பள்ளிக்கூடங்கள் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்கின்றன. ஆனால், அவை கருத்தரிக்காமல் இருப்பது எவ்வாறு என்று கருத்தடையில் மிகவும் கவனம் செலுத்துகின்றன.
இந்த பாலியல் கல்வியில் பொருளுள்ள உறவுகள் அல்லது பரஸ்பர சம்மதம் பற்றி எதுவும் உள்ளடங்குவது இல்லை.
அவர்கள் பால்வினை நோய்கள், கருத்தடை சாதனங்கள் பற்றி அதிகம் அறிந்திருக்கும் நிலையில். பொருளுள்ள அம்சங்கள் பற்றி அவ்வளவாக இல்லை.
கருத்தடைக்கு மேலதிகமாக இந்த குழந்தைகளுக்கு உண்மையிலேயே நாம் கற்று கொடுக்க வேண்டும்.
இதற்கு ஒரு புரட்சி தேவைப்படுகிறது. இவ்வாறு கற்றுக்கொடுக்க நிபுணர்கள் வேண்டும். ஆசிரியர்கள் சற்று மேலதிகமாக தனிப்பட்ட, சமூக, சுகாதார மற்றும் பொருளாதார அம்சங்களை கவனித்து கொள்ள வேண்டும். அவர்கள் நிச்சயமாக நிபுணர்கள் அல்ல. இதுவொரு அதிகபடியான பாடமாக அல்லது 20 நிமிட நேரம் கற்பிக்கும் வடிவமாக அமையலாம்.
இத்தகைய விடயங்களை பற்றி நம்பிக்கையோடு பேசுவதாக பல ஆசிரியர்கள் உணர்வதில்லை.
நாங்கள் பாலியல் கற்றுக்கொள்வதற்கு ஒரு ஆபாச இணையதளத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம். இதிலிருந்து பாலியல் கல்வியை கற்கிறார்கள். பாலியலே சமூக விடயங்களுக்குள் தெளிவாக உள்ளடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டதொரு தலைமுறை
நான் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது, இணைய கேமராக்கள், ஆபாச இணைய அரட்டைகள் மற்றும் எம்எஸ்என் மெசன்ஜரில் பிரச்சனைகள் இருந்தன.
ஆனால், மாணவர்கள். மாணவியரிடம் இவ்வாறு பேசிக்கொண்டிருந்ததாக எனக்கு நினைவில்லை.
இத்தகைய மாறுப்பட்ட நிலை எதனால் ஏற்பட்டது என்று உண்மையிலேயே தெரியாது.
ஆபாச தொழில்துறையிலுள்ள பலவற்றை பற்றி இதற்கு நாம் குறை சொல்லலாம். சமூக வலைதளங்கள் மற்றும் மிக எளிதாக அணுகக்கூடிய வசதியையும் குறை கூறலாம்.
ஆனால், பாலியலால் ஏற்படும் கனாகனத்தை பார்க்காத பாதிக்கப்பட்ட தலைமுறையாக இந்த மாணவர்கள் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












