காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கான பிரத்யேக சுடுகாடு

காந்தமுல்லா கிராமத்தில் உள்ள இந்த இடுகாடு சாதாரணமானது அல்ல. கடந்த ஒரு ஆண்டில், இங்கு 45 பிரேதங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின், பாராமுல்லாஹ் மாவட்டத்தில், ஸ்ரீநகர்- முசாஃபராபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறிய கிராமம், காந்தமுல்லா. அதன் சாலையில் இடது பக்கத்தில் யெஹ்லூம் நதி பாய்கிறது.

சுடுகாட்டில் மிக அருகிலேயே காவல்நிலையம் உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்பு, ஜம்மு கஷ்மீர் காவல்துறையால் இந்த இடுகாடு அமைக்கப்பட்டது.

காவல் துறையை பொருத்தவரையில், பாதுகாப்பு படையினருடனான சண்டையின் போது கொல்லப்படும், பாகிஸ்தானிய அல்லது வெளிநாட்டு கிளர்ச்சியாளர்களுக்கான இடுகாடு இது.

இங்குள்ள சில சமாதிகளில், தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், குறிப்பிட்ட நபர் எந்த பகுதியில் நடந்த சண்டையில் இறந்தார் மற்றும் அந்த சமாதியின் எண் பொறிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்களின் பெயர்கள் இது பொறிக்கப்படவில்லை. கொல்லப்பட்டு அடையாளம் தெரியாத கிளர்ச்சியாளர்களின் பெயர்களை, காவல்துறையின் பதிவேட்டிலும் பார்க்கமுடிவதில்லை. பெரும்பாலான எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

அங்கு புதைக்கப்பட்டுள்ள கிளர்ச்சியாளர்களுக்காக, காவல்துறையினர் தனியாக ஒரு பதிவேட்டை வைத்துள்ளனர். அதில், கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களின் புகைப்படத்துடன் பிற தகவல்களும் உள்ளன.

பெரும்பாலான புதைக்கும் பணிகள், இரவின் இருளிலேயே நடக்கின்றன. புதைக்கும் பணிக்கு முன்பு, காவல்துறையினரும், உள்ளூர் கிராமத்தினரும், மத சடங்குகளை செய்கின்றனர்.

இறுதி சடங்குகளில் பங்கெடுத்து, புதைப்பதற்கான குழிகளை தோண்டும், பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு கிராமவாசி, கடந்த ஒரு ஆண்டில், தான் பல முறை குழிகளை தோண்டியுள்ளதாகவும், பலரை புதைத்துள்ளதாகவும் கூறுகிறார். குழிகளில் புதைக்கப்படுவது யார் என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. காவல்துறையினர் எப்போதெல்லாம், குழிதோண்டவேண்டும், ஒருவரை புதைக்க வேண்டும் என கூறுகிறார்களோ, அப்போதெல்லாம் நான் வந்து அதை செய்வேன் என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், "உடல்களை இங்கு புதைப்பது என்பது ஒரு பழக்கம் ஆகிவிட்டது. ஒருவரை புதைப்பதற்கு முன்பு, நாங்கள் மதரீதியான சடங்குகளை செய்வோம். காவல் துறையினரும், கிராம மக்களும் இணைந்தே இதை செய்வோம். இறந்தவரின் உடல் இங்கு வந்து சேர்வதற்கு முன்பே, காவல்துறை எங்களிடம், குழிவெட்டவும், இறுதி சடங்குகளுக்கான பணிகளை செய்யவும் கூறிவிடுவார்கள்".

எங்களுக்கு தெரிந்தவரையில், நாங்கள் இங்கு குழிகளை வெட்டுவோம், இறுதிச் சடங்குகளை செய்வோம், உடலை புதைப்போம். புதைக்கப்படுபவர் யார் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. காவல்துறை என்ன கூறுகிறதோ, அதை நாங்கள் நம்புகிறோம் என இன்னொரு கிராமவாசி தெரிவிக்கிறார்.

சமீபத்தில் தெற்கு காஷ்மீரில், லக்ஷர் இ தொய்பா தளபதி அபூ தூஜானா காவல்துறையினரால் கொல்லப்பட்ட போது, அவரின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு, பாகிஸ்தான் உயர் ஆணையத்திடம் கேட்டுக்கொள்ளப்படும் என காவல்துறை தலைமை அதிகாரி முனீர் கான் தெரிவித்தார்.

காஷ்மீரின் 28 ஆண்டுகால தீவிரவாத்ததில், ஒருவரின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறையினர், பாகிஸ்தானிற்கு கடிதம் எழுதியது இதுவே முதல்முறை.

காஷ்மீர் பகுதியில் காவல்துறை தலைவர் முனீர் கான் பிசிசியிடம் கூறுகையில், "பாகிஸ்தான், அதன் பிரஜைகள் காஷ்மீரில் செயல்படுகிறார்கள் என்பதை ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது. எப்போது பாகிஸ்தானிய கிளர்ச்சியாளர் கொல்லப்பட்டாலும், நாங்கள் அவரின் விவரங்களை பதிவு செய்துகொள்வதோடு, அவரின் உடலை பெற்றுகொள்ளுமாறு பாகிஸ்தானிற்கு எழுதிகொண்டு இருப்போம். இதற்காக நாங்கள் தனியாக ஒரு சுடுகாட்டையும் கண்டறிந்துள்ளோம்.

இதற்கு முந்தைய நேர்காணலில் கூறியது போல, பாகிஸ்தான் தனது நாட்டினரை கைவிடும் சூழலில், நாங்கள் அவர்களை மரியாதையான முறையில் புதைக்கிறோம். மத ரிதியாக நாங்கள் அவர்களுக்கு சரியான முறையில் இறுதி சடங்குகளை செய்கிறோம்.

இது எல்லாவற்றிற்கு அப்பால், மனிதாபிமான அடிப்படையில், பாகிஸ்தான், தனது நாட்டிற்கு சொந்தமான இந்த உடல்களை பெற்றுகொள்ள வேண்டும். பாகிஸ்தானால் கைவிடப்பட்டவர்களின் உடல்களை, நான் குறிப்பிட்ட அந்த இடுகாட்டில் புதைக்கிறோம். பாகிஸ்தான் வேண்டுமென்றால், இந்த உடல்களை பெற்றுக்கொள்ளலாம்".

2015ஆம் ஆண்டு, காவல்துறை, கிராமவாசிகளிடம், வெள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் உடல்களை அளிக்க கூடாது என முடிவு செய்தது. தெற்கு காஷ்மீர் பகுதியின், குல்காம் மாவட்டத்தில், லக்ஷர் தளபதி , அபூ காசிம் கொல்லப்பட்ட போது, அவரின் இறுதி சடங்கில் பங்கேற்க கடல் அளவு மக்கள் வந்ததை பார்த்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரின் உடலை புதைக்கும் உரிமைக்காக, இரண்டு கிராமத்தினர் சண்டையிட்டு கொண்டனர். பிறகு குல்காமில் உள்ள புகாம் கிராமத்தில் அவர் உடல் புதைக்கப்பட்டது.

இந்த பகுதியில் வசிக்கும் சிலர், இந்த சுடுகாட்டை, `ஷாஹீத் மசார்` (தியாகிகளின் இடுகாடு) என அழைக்கின்றனர்.

2016 ஆம் ஆண்டில், இங்கு 23 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில், இதுவரை 22 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டு, வடக்கு காஷ்மீர் பகுதியில், ஆயிரக்கணக்கான அடையாளம் தெரியாத சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகு, மாநில மனித உரிமைகள் ஆணையம், அடையாளம் தெரியாத சமாதிகளில், 2,156 உடல்களுக்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.

கடந்த 30ஆண்டுகளாக, காஷ்மீரில் உள்ள தீவிரவாதத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போவதற்கு, காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் தான் காரணம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 30 ஆண்டுகால காஷ்மீரின் தீவிரவாத்தில், இந்தியாவின் பக்கமுள்ள காஷ்மீரிற்குள் ஊடுருவ முயன்ற பலரை, எல்லை பாதுகாப்பு பகுதியில் கொன்றுள்ளதாக , இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்