புதினின் சட்டையில்லாப் புகைப்படங்கள் தூண்டிய ஆர்வம்!

ரஷ்ய அதிபர் புதின் சட்டையில்லாமல் தமது விடுமுறையைக் கழிக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அதனால் ஈர்க்கப்பட்ட "டெலிகிராம்" செயலியின் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவெல் டுர்ரேஃப், சட்டை அணியாமல் எடுத்த தனது புகைப்படங்களை வெளியிட்டு பிறருக்கும் அந்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளார்.

பாவெல் டுர்ரேஃப் இன்ஸ்டாகிராமில் (போட்டோஷாப் மென்பொருளால் மாற்றியமைக்கப்பட்ட அல்லது மெருகேற்றப்பட்ட புகைப்படங்களை தடை செய்கிறது) பதிவிட்ட #புதின் சட்டையில்லா சவால் (#PutinShirtlessChallenge) என்கிற பதிவை ஒரு நாளில் 47 ஆயிரம் பேர் விரும்பியிருந்தனர்.

விடுமுறையின்போது அதிபர் புதின் சட்டையில்லாமல் தோன்றுவது முதல்முறை இல்லை என்றாலும், இது மாதிரியான சவால் என்பது இதுவே முதல்முறையானதாக இருக்கலாம்.

டுர்ரேஃபை பின்தொடருபவர்களில் பலர் அவருடைய கட்டுடல் பார்த்து, "சாதாரண முறையில் கட்டுடல் கொண்டவர்" என்றும், "சிறந்த ஆண்" எனறு கூறி அதிசயித்து போயிருக்கின்றனர்.

ரஷ்ய அரசியல்வாதி டிமிட்ரி குட்கோஃபின் புகைப்படம் உள்பட, பல டிவிட்டர் பதிவுகள் காணப்படுகின்றன.

இந்த சவாலுக்கு பதிலளிக்கும் விதமாக, நிக்கோலே சோகோலோஃப் மற்றும் கோன்ஸ்டான்டின் புரோட்ஸ்கை உள்பட விடுமுறையில் எடுத்த பகைப்படங்களை ரஷ்ய ஆண்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

அனாஸ்டாசியா சுட்டுக்காட்டுவதைபோல, பெண்களும் இந்த சவாலுக்கு விதிவிலக்கல்ல.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தெற்கு சைபீரியாவில் கழிந்த அதிபரின் விடுமுறை பற்றி ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்டது. அவருடைய சட்டையில்லாத புகைப்படங்கள் பெருமளவில் பகிரப்பட்டன. நான்காவது முறையாக அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட போகிறாரா? என்று சிலர் டிவிட்டர் பதிவிடவும் செய்தனர்.

பிறர், தன்னுடைய விருப்பங்களை நிறைவு செய்த கூர்முனை வேல் வைத்திருக்கும் சோம்பலான மனிதன் பற்றிய ஒரு ரஷ்ய விசித்திரக் கதையை மேற்கோள் காட்டினர்.

அல்லது கிரம்ளினின் வலுவான தோற்றத்தை அமெரிக்காவுக்கு காட்டுவதாக இந்த புகைப்படங்கள் உள்ளனவா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இருப்பினும், பூனைகள் மற்றும் உடல் பகதி என இந்த சவால் சமூக ஊடகங்களில் கேலிக்கும் உள்ளாகியது.

மார்குஸ் லோகி தன்னுடைய ஆடையில்லாதப் பூனையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :