You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நாது லா கணவாயில் இருந்து இந்தியா படைகளைத் திரும்பப் பெறவேண்டும்': சீனா
சிக்கிம் மற்றும் திபெத்துக்கு இடையே சீனாவுக்குச் சொந்தமான பகுதியில் இந்தியா ஊடுருவியதாக சீனா குற்றம் சாட்டியிருப்பதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சீனாவின் எல்லைக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அத்துமீறி நுழைந்து அவர்களுடைய ''வழக்கமான நடவடிக்கைகளை'' தடுத்ததாக கூறும் அதிகாரிகள், அவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் எல்லைப் பகுதிக்குள் சீனத் துருப்புகள் அத்துமீறியதாக அண்மையில் இந்தியா குற்றம் சாட்டியிருந்தது.
திபெத்தில் உள்ள புனிதத்தலங்களுக்கு யாத்திரை செல்வதற்கு இந்துக்களும், பெளத்த மதத்தினரும் நாது லா கணவாய் வழித்தடத்தையே பயன்படுத்துவது வழக்கம்.
சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையே 1967 களில் இந்த பிராந்தியத்தில் மோதல்கள் எழுந்தன. இந்த பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது பதற்றங்களும் ஏற்படும்.
அண்மை ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே எழுந்த மோதல்களில் இதுவே தீவிரமானதாகப் பார்க்கப்படுகிறது.
தனது எல்லைப்பகுதிக்குள் இருக்கும் சாலையில் உள்ள ஒரு கட்டடத்திற்குள் நுழைவதை இந்தியா தடை செய்ததாக சீனா குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்தியத் தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தும் வெளியிடப்படவில்லை.
சீனத் துருப்புக்கள் சிக்கிம் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, இந்திய ராணுவத்தின் இரண்டு பதுங்குகுழிகளை அழித்ததாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பதட்டத்தினால், புனித யாத்ரீகர்கள் நாது லா கணவாய் வழியாக செல்வதற்கு சீனா தடை விதித்துவிட்டது.
இதையும் படிக்கலாம்:
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாயாகும் பெண்கள் (காணொளி):
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்