ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு

ஏடிஎம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டன.

தேவைப்படும்போது ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் காசை கையில் வைத்துக் கொள்வதில்லை.

ஆனால் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் யாரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம் லண்டன், என்ஃபீல்டில் உள்ள பார்க்லேஸ் வங்கிக் கிளையில் நிறுவப்பட்டது.

ஏடிஎம் இயந்திரம் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெபர்ட் பரோனால் கண்டுபிடிக்கப்பட்டது

இயந்திரத்தின் பொன்விழாவிற்கு மரியாதை செய்யும் விதமாக, அந்த ஏடிஎம் இயந்திரம் தங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த பரோனிற்கும் பார்க்லேஸ் வங்கி கிளைக்கும் ஏற்பட்ட துரித ஒப்பந்தங்களால் பார்க்லேஸ் கிளையில் ஏடிஎம் இயந்திரம் தொடங்கப்பட்டது.

"உலகெங்கிலும் அல்லது பிரிட்டனில் எனது பணத்தை நானே எடுத்துக் கொள்ள ஒரு வழி இருக்கும் என்று எனக்கு தோன்றியது" என 2007 ஆம் பிபிசியிடம் தெரிவித்தார் பரோன். மேலும் சாக்லெட் வழங்கும் இயந்திரத்தை பார்த்து தனக்கு ஏடிஎம் இயந்திரத்திற்கான யோசனை வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆட்டோமேடட் டெல்லர் மெஷின் (Automated Teller Machine) என்று அழைக்கப்படும் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் 1967ஆம் ஆண்டு பெரும் விழாக் கோலத்துடன் நிறுவப்பட்டது.

முதல்முதலில் தொலைக்காட்சி பிரபலமான ரெக் வார்னே என்பவர், வவுச்சர் ஒன்றை செலுத்தி பின் ஆறு இலக்க எண்ணை அழுத்தி பத்து மொரமொரப்பான ஒரு பவுண்ட் நோட்டுகளை அந்த இயந்திரத்தில் பெற்றுள்ளார்.

அதன்பின் ஒன்பது நாட்களுக்கு பிறகு தனது நாட்டில் வடிவமைப்பட்ட ஏஎடிஎம் இயந்திரத்தை ஸ்வீடன் அறிமுகம் செய்தது.

இன்று உலகம் முழுவதும் மூன்று மில்லியன் ஏஎடிஎம் இயந்திரங்கள் உள்ளன.

தங்களுக்கு தேவையான பணத்தை தேவையான சமயத்தில் எடுத்துக் கொண்டு பண பரிவர்த்தனையில் மக்கள் தாங்கள் விரும்பும்படியான சேவையை பெற்று வருவதற்கு இது வித்திட்டுள்ளது.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்