"அரச குடும்பத்திற்கு வெளியே இருக்க விரும்பினேன்": இளவரசர் ஹாரி

அரசு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது தொடர்பாக மிகவும் தெளிவாக அறிய வந்த இளவரசர் ஹாரி, அதிலிருந்து விலகி இருக்க முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுத்துவிடுவதை கருத்தில் கொண்டிருந்த அவர் இறுதியில், அரச குடும்பத்தில் இருக்க வேண்டும். ஆனால், தனக்கென ஒரு பங்கை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

பிரிட்டன் படையோடு இணைந்து பணியாற்றியதுதான் "நான் (கோட்டையில் இருந்து) தப்பிக்க இதுவரை கண்டவற்றில் சிறந்த தருணம்" என்று முடிக்குரிய 5-ஆவது வாரிசாக இருக்கின்ற இளவரசர் ஹாரி ஞாயிற்றுக்கிழமை "த மெயில்" செய்தித்தாளுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

32 வயதாகும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தானில் இருமுறை பணியாற்றியது உள்பட 10 ஆண்டுகள் படையில் பணியாற்றியிருக்கிறார்.

இளவரசர் ஹாரி ஆப்கனிஸ்தானில் இருக்கிறார் என்று 2007 ஆம் ஆண்டு ஊடகங்களில் செய்தி வெளியான பின்னர், அங்கிருந்து அவர் வெளியேற வேண்டியதாயிற்று.

"நான் மிகவும் கோபமடைந்தேன். படையில் பணிபுரிந்ததுதான் நான் அரச குடும்பத்தில் இருந்து தப்பித்து இருக்க கிடைத்த சிறந்த தருணம். நான் எதையோ சாதித்துக் கொண்டிருப்பதாக எண்ணினேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வேறுபட்ட பின்னணிகளில் இருந்து எல்லாவித மக்களோடும் ஆழமான புரிதலை கொண்டுள்ளேன். ஒரு குழுவின் பகுதியாக இருப்பதை உணர்ந்தேன்" என்று ஹாரி தெரிவித்திருக்கிறார்.

மனம் விரும்பும் தொண்டு பணி

அதன் பிறகு, காயமடைந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் மனநல குழுக்கள் உள்பட தொண்டுப் பணிகளில் அவர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். "எம்முடைய தொண்டுப் பணிகளில் மிகவும் தீவிரமாக இருக்கின்றோம். என்னுடைய அன்னையால் எனக்கு வழி காட்டப்பட்டதால், தொண்டு பணிகளை தெரிவு செய்திருக்கின்றோம்" என்று ஹாரி கூறியுள்ளார்.

"நான் தொண்டு பணிகளையும், மக்களை சந்திப்பதையும் விரும்புகின்றேன்" என்கிறார் ஹாரி

முடிசூட்டிக் கொள்ள அரச குடும்பத்திலுள்ள யாரும் விரும்பவில்லை என்று இளவரசர் ஹாரி அளித்த பேட்டியை கடந்த வாரம் நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டது.

"இதை நாங்கள் எங்களுக்காக செய்யவில்லை. மக்களின் நன்மைக்காக செய்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

"அரச குடும்பத்திலுள்ள யாராவது அரசராக அல்லது அரசியாக இருக்க விரும்புபவர் உண்டா? இருக்கிறார்கள் என்று நான் எண்ணவில்லை. ஆனால், நாங்கள் எங்களுடைய கடமைகளை சரியான நேரத்தில் செய்வோம்" என்று அவர் கூறியுள்ளார்.

அரச குடும்பத்தின் எதிர்கால திசை பற்றியும் எண்ணியிருப்பதாகவும் ஹாரி குறிப்பிட்டுள்ளார்.

"மன்னராட்சி நீடித்து இருப்பதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம். இது என்ன அறநெறிகளுக்காக செயல்பட்டு வருகிறது என்பதிலும் தீவிரமாக இருக்கிறோம்" என்று குறிப்பிடுட்டுள்ளார்.

"அரசியின் கீழ் செயல்பட்டது போல தொடர்ந்து செல்ல முடியாது. சரியானவற்றை அடைய சவால்களும், அழுத்தங்களும் இருக்கும்" என்கிறார்.

அனைத்தும் மிக விரைவாக கடந்து செல்கின்றன. குறிப்பாக சமூக ஊடகங்களால் இது நடக்கிறது. எனவே, மன்னராட்சியை நவீனப்படுத்தவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என்று இளவரசர் ஹாரி தெரிவித்திருக்கிறார்.

ஓட்ட பந்தயத்தில் அசத்திய பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர்

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்