You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தட்சணைக்கு காசு இல்லையா ? கிரெடிட் கார்டை பயன்படுத்தலாமே – இது இங்கிலாந்தில்
இங்கிலாந்து திருச்சபை அதன் 40 சர்ச்சுகளில் தட்சணை தட்டை அனுப்புவதற்கு பதிலாக, மின்னணு முறையில் நன்கொடைகளை வழங்கும் வசதியை கொண்டுவரவுள்ளது.
இளைஞர்கள் பணம் எடுத்துச் செல்வதில்லை என்ற காரணத்தால் இந்த நடைமுறை சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருமணம் அல்லது பெயர் சூட்டும் விழாக்களில் எப்போதாவது பங்குபெறுபவர்கள் தட்சிணை செலுத்தும் நடைமுறை இருப்பதையே மறந்திருக்கலாம். அவர்கள் தட்சணை செலுத்துவதை இந்த நடைமுறை அதிகரிக்கும் என்று இங்கிலாந்து தேவாலயம் நம்புகிறது.
இங்கிலாந்தின் பல பழம்பெரும் தேவாலயங்களின் சுவர்கள் தடிமனானவை என்பதால், இந்த கிரெடிட் கார்டு இயந்திரங்கள் செயல்படத் தேவையான இணைய வசதியைத் தரும் வயர்லஸ் ( வைஃபை) தொடர்பு வசதியை தருவது இத்திட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள பெரும் சவாலாக இருக்கும்.
எப்படியோ கடவுளுக்குக் காணிக்கை தர, அறிவியல் தொழில்நுட்பம் துணையாக இருந்தால் சரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்