You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எந்திர பகுதியில் துளை: சிட்னிக்கு திரும்பி தரையிறங்கிய 'சைனா ஈஸ்டர்ன்' விமானம்
எந்திரத்தை மூடிய பகுதியில் துளை ஏற்பட்டிருந்த காரணத்தால் சிட்னியிலிருந்து ஷாங்காய் சென்று கொண்டிருந்த 'சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்" விமானம் சிட்னிக்கு திரும்பி தரையிறங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து ஷாங்காய்க்கு சென்றுகொண்டிருந்த எம்யு736 விமானம் மேலேழுந்து பறக்க தொடங்கிய ஒரு மணி நேரத்தில், எந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதைப் பற்றி விமானி தகவல் அளித்தார்.
விமானத்திற்குள் எரிகின்ற வாசனையை உணர்ந்ததாக அதில் பயணம் செய்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். பயணிகள் அனைவரும் இரவு முழுவதும் சிட்னியிலே தங்க வேண்டியதாயிற்று.
ஏர்பஸ் எ330 விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எந்திரத்தை மூடிய பகுதியில் பெரியதொரு துளை காணப்படுவதை சமூக ஊடகங்களில் பரவி வருகின்ற புகைப்படங்கள் காட்டுகின்றன.
விமானம் மேலெழுந்து பறந்ததும் அதன் எந்திரத்தின் இடதுபுறத்திலிருந்து உரத்த சப்தம் கேட்டதாக பல பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் இது பற்றி புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விமானத்தில் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருந்ததற்கான காரணத்தை இப்போதே தெரிவிப்பது கடினம் என்று 'ஃபிளைட்குளோபல் கன்சல்டிங்' நிறுவனத்தின் வானூர்தி நிபுணர் கிரெக் வால்டிரன் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க ரகசிய விண்வெளி விமானம் என்ன செய்கிறது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்