You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்தேகத்திற்குரிய உரையாடலால் திட்டமிடலின்றி தரையிறக்கப்பட்ட விமானம்
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவீனியாவிலிருந்து பிரட்டனிற்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் "சந்தேகத்திற்கு இடமாக பயங்கரவாதம் தொடர்புடைய விவாதம்" ஒன்றை கேட்டதால் விமானியிடம் எச்சரிக்கப்பட்டு திட்டமிடலின்றி அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
அதிலிருந்த பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட பிறகு, சனிக்கிழமை மதியம் ஸ்லோவீனியாவின் தலைநகர் லூப்லியானாவிலிருந்து எஸக்ஸில் உள்ள ஸ்டான்ஸ்டட்டிற்கு சென்று கொண்டிருந்த அந்த ஈஸிஜெட் விமானம் ஜெர்மனியின் கொலோங் பான் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது
விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து 151 பயணிகள் வெளியேற்றப்பட்டனர்; மேலும் மூன்று மணி நேரங்களுக்கு விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
"விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் விமானத்தில் சந்தேகத்திற்குரிய உரையாடல்கள் நடைபெறுவதாக விமானியிடம் தெரிவிக்கப்பட்டது; எனவே அதன் பிறகு அவர் கொலோங் பான் விமான நிலையத்தில் எந்த திட்டமிடலுமின்றி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார்." என கொலோன் பான் விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
"விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட பிறகு…151 பயணிகளும் அவசர சறுக்கு வழியின் ஊடாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்" என அவர் தெரிவித்தார்.
அவசர சறுக்கு வழியை பயன்படுத்திய ஒன்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
"கட்டுப்பாடான முறையில் தகர்க்கப்பட்டது"
அந்த மூன்று நபர்களின் உரையாடல் குறித்து, பிற பயணிகளால் விமானக் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது என கொலோங் போலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் "பயங்கரவாத செய்தி" என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது அது குறித்த விரிவான தகவல்களை தெரிவிக்கவில்லை.
மேலும் மத்திய போலிஸார், கட்டுப்பாடான முறையில் கைது செய்யப்பட்ட மனிதரின் பையை வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிப்பட்ட பையில் வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றபடவில்லை. 31,38, மற்றும் 48 வயது மதிப்புமிக்க மூவர் கைது செய்யப்பட்டதாக கொலிங் போலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.
அந்த மூவரும் லண்டன் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் அவர்கள் தொழில் தொடர்பான பயணத்திலி்ருந்து திரும்பி வந்து கொண்டிருந்ததாக `தி பிட்` செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
விமானத்தில் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வதற்காக விமானம் எந்த திட்டமிடலுமின்றி தரையிறக்கப்பட வேண்டும் என விமானியால் தீர்மானிக்கப்பட்டதாக ஈஸிஜெட் விமானம் சேவை தெரிவித்துள்ளது.
இரவு தங்குவதற்காக அனைத்து பயணிகளுக்கும் விடுதி வசதி செய்து தரப்பட்டுள்ளது மேலும் ஞாயிறன்று காலை அவர்கள் மீண்டும் விமானத்தில் பயணிக்கலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நிலைமையை புரிந்து கொண்டதற்காக பயணிகளுக்கு நன்றி தெரிவித்த அந்நிறுவனம், அதன் பயணிகள் மற்றும் விமானக் குழுவின் பாதுகாப்பே அதன் முன்னுரிமை என தெரிவித்துள்ளது.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்