You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தோனேஷியா: ஒரு பாலுறவினர் சேர்க்கை குற்றச்சாட்டுக்கு தண்டனை பகிரங்கமாக சாட்டை அடி
இந்தோனேஷியாவின் அகே மாகாணத்தில் ஓரினசேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு ஆண்களுக்கு தலா 85 சாட்டை அடி கொடுக்கப்பட்டது.
இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபருக்கு 85 சாட்டை அடிகள் வழங்கப்பட்டன.
கடந்த மார்ச் மாத்த்தில் 20 மற்றும் 23 வயதுடைய இந்த இளைஞர்கள் இருவரும் ஒரே படுக்கையில் இருந்தபோது உள்ளூர்வாசிகள் அவர்களை கையும்-களவுமாக பிடித்தனர்.
இந்தோனேசியச் சட்டங்களின்படி, ஓரின சேர்க்கை என்பது சட்ட விரோதமானது இல்லை என்றபோதிலும், பழமைவாத அகே மாகாணத்தில் மட்டும் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.
பிற செய்திகள் :
இந்த மாகாணத்தில் ஷரியா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள் இவர்கள்தான்.
அகே மாகாணத் தலைநகர் பண்டாவில் ஒரு மசூதிக்கு வெளியே குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டபோது, அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இதுபோன்ற தண்டனை நிறைவேற்றப்படுவது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று அங்கு கூடியிருந்தவர்களில் ஒருவர் சொன்னார். மற்றொருவரோ, இதைவிட இன்னமும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களும் மனிதர்கள்தான், எனவே யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை சந்தித்தபோது, அவர் மிகவும் அதிர்ந்து போயிருந்தார். அவரிடம் தனியாக பேச மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றிபெறவில்லை, அவரைச் சுற்றி பலர் இருந்தனர்.
அவர்களை படுக்கையில் இருந்து அலங்கோலமான நிலையில் உள்ளூர் மக்கள் பிடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோப் பதிவுகள் பரவலாக பரப்பப்பட்டன.
மருத்துவப் படிப்பில் இறுதி ஆண்டு படித்துவந்த அந்த மாணவரின் வீட்டை சுற்றிவளைத்த உள்ளூர் மக்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்த அவர்களை பிடித்தார்கள். மருத்துவராகும் கனவில் இருந்த அவர் மீது எழுந்த இந்த குற்றச்சாட்டால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
"எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை விரைவில் நிறைவேற்றட்டும். நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இந்த இருண்ட உலகத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டங்கள் அகே மாகாணத்தில் அமல்படுத்தப்பட்டபிறகு, பொது இடத்தில் சாட்டை அடி தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஒரினச் சேர்க்கையாளர்கள் கேளிக்கை விருந்து ஏற்பாடு நட்த்தியதான குற்றச்சாட்டில் இந்த மாதத் தொடக்கத்தில் 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு தலைநகர் ஜகார்த்தாவில் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் நடைபெற்ற 'ஓரின சேர்க்கையாளர்களின் பாலியல் கேளிக்கை விருந்து' தொடர்பாக போலீசார் 141 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தோனேசியாவில், சிறிய எண்ணிக்கையில் இருக்கும் ஒரு பாலுறவினர் மற்றும் திருநங்கையர் சமூகக் குழுவினர் மீதான விரோதப்போக்கு அதிகரித்து வருகிறது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்