You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்புக்கே தெரியாமல் நடந்த சிறப்பு வழக்கறிஞர் நியமனம்: வியப்பில் வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கும் முடிவை அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக மிகப்பெரிய சூனிய வேட்டை நடைபெறுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்த விசாரணை விரைவில் முடிவுக்கு வருமென்று தான் எதிர்பார்ப்பதாக டிரம்ப் கருத்துத் தெரிவித்திருப்பதாக வெள்ளை மாளிகை ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், டிரம்ப் அதற்கு எதிர்மறையான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
ரஷ்ய தலையீடு குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு எஃப்.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுநலனைக் கருத்தில் கொண்டு வெளிநபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க துணை அட்டார்னி ஜெனரல் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையை அரசியல்வாதிகள் வரவேற்றுள்னர்.
ஒபாமாவின் நிர்வாகத்தின் போதும், ஹிலரி கிளிண்டனின் தேர்தல் பிரசாரத்தின் போதும், நடைபெற்ற "சட்டரீதியற்ற செயல்" என்று டிரம்பால் விவரிக்கப்படும் செயலை விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்படவில்லை என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வாரம் எஃப்பிஐ இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கோமி அதிபர் டிரம்பால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வியப்பில் வெள்ளை மாளிகை!
ராபர்ட் முல்லரின் நியமனம், வெள்ளை மாளிகையை வியப்பில் ஆழ்த்தியது. ராபர்ட்ட முல்லர் நியமனம் குறித்து துணை அட்டார்னி ஜெனரல் கையெழுத்திட்ட பிறகுதான் டிரம்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
டிரம்பின் பிரசார குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள சாத்தியமான தொடர்புகள் குறித்து எஃப்.பி.ஐ. மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரணை நடத்தி வருகின்றநர்.
கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா ரகசியமாக செயல்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்புக்கள் நம்புகின்றன.
டிரம்ப் குறித்த பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்