You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓட்டுனர் இல்லா 'பாட்' வாகனங்கள்
நான் இப்போதுதான், ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் ஒரு ' பாட்' வாகனத்தில் லண்டனின் வடக்கு கிரெனிச் பகுதியை சுற்றி பயணம் செய்து , ஓர் அருமையான காலை பொழுதைக் கழித்தேன்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் இது போன்ற வெள்ளை நிற 'பாட்'களை நீங்கள் பார்த்ததிருக்கலாம். அது போல வடிவமைக்கப்பட்டதுதான் இது. இதில் ஸ்டீயரிங் சக்கரம் கிடையாது.
ஓட்டுநர் இல்லாத வாகனத்தை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. முன்பு நான் தானியங்கி நிசான் கார் ஒன்றில் பயணம் செய்திருக்கிறேன்.
லண்டனில் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அது வீதியை தூய்மை செய்யும் வாகனத்தின் பின் புறம் ஏறக்குறைய மோதியே விட்டது.
இந்த தொழில்நுட்பத்தை கொண்ட வாகனத்தை தயாரிக்க மேலும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என நிசான் நிறுவனம் கருதுகிறது.
ஆனால் நிசான் நிறுவனம் இந்த தானியங்கி வாகனம் தொடர்பாக கடந்த சுமார் 12 ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது. ஆனால் முடிவாக, தானியங்கி கார்கள்தான் பிரபலமாகும் என்று நம்புகிறார்கள்.
கார்களை குறைவான இடைவெளியில் ஒட்டிச்செல்லுவதன் மூலம் வாகன நெரிசலை குறைக்கமுடியும் காப்பீட்டு தொகையை குறைக்க முடியும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள்.
இந்த பிரச்னையை மற்றொரு கோணத்தில் பார்ப்பதுதான் கிரெனிச் திட்டம். இந்த கேட்வே திட்டத்திற்கான ஒரு பகுதி நிதி பிரிட்டிஷ் அரசால் வழங்கப்படுகிறது.
தற்போதுள்ள போக்குவரத்து அமைப்புகளை ரோபோ மயமாக்க அவர்கள் விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு 'பாட்' வாகனம் என்ற வகையில் இல்லாமல், ஒரு சமூக பகிர்வு மாதிரியை உருவாக்க எண்ணுகிறார்கள். அதன்மூலம் தனிநபர்களின் கார் தேவைக்கு முடிவுகட்ட நினைக்கிறார்கள்.
ரெயில் நிலையம், மெட்ரோ நிலையம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் போன்ற போக்குவரத்து மையங்களிலிருந்து , பயணிகளின் வீடுகளுக்கு செல்லும் 'கடைசி மைல்' பயணத்திற்கு தனியான கார் தேவைப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த 'பாட்' வாகன்ங்கள் உருவாக்கப்பட்டு, தொழில் நுட்பம் இவ்வசதி கொண்ட ஸ்மார்ட் நகரங்களில் போக்குவரத்து பிரச்னையை தீர்க்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் உள்ளார்கள்.
இதன்மூலம், நீங்கள் டியூப்/மெட்ரோ ரயிலில் நீங்கள் சேரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்தவுடன், உங்களது ஸ்மார்ட்போன் மூலம் 'பாட்' வாகனத்தை அழைத்து, உங்கள் வீட்டை அடைந்துவிடலாம். இந்த தொழில்நுட்பம், வெகுஜன போக்குவரத்து அமைப்புகளை இணைக்கும்படியான, வாகன நெரிசல் மற்றும் மாசுபாட்டை குறைக்கும் தொழில்நுட்பமாக அமையும்.
தற்போதுள்ள மற்ற போக்குவரத்துக்கு சாதனங்களை போன்ற சாதாரணாமன ஒன்றாக 'பாட்' அமையவேண்டும். அது ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் அனுபவமாக இருக்கக்கூடாது,'' என மின்சார வாகனங்களை உருவாக்கும் ஆக்ஸ்போடிகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிரேம் ஸ்மித் கூறுகிறார்.
''பயணங்கள் சாதாரணமானதாக அமைந்துவிட்டால், நாம் சரியான மென்பொருள் பயன்படுத்துகிறோம் என்று உறுதியாக சொல்லலாம்,'' என்கிறார் கிரேம் ஸ்மித்
இந்த 'பாட்' உருவாக்கத்தால், நகரத் திட்டமிடல் குறிப்பாக குடியிருப்பு கட்டுமானம், சாலைகள் மற்றும் கட்டிடங்களின் வடிவமைப்பு ஆகியவைகளிலும் மாற்றம் வரும் என இதில் ஈடுபட்டுள்ள பலரும் கணிக்கிறார்கள் என்பது வியப்புக்குரியது.
எங்களது பயணத்தில் பிரச்சனை இல்லாமல் இல்லை. ஒரு பாதசாரி திடீரென சாலையில் 'பாட்' வாகனத்தின் முன் சென்றபோது அவரசமாக நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. பேட்டரிகள் தொடர்பாக ஒரு சின்ன பிரச்சனை இருந்தது.
2019ல் நுகர்வோர்கள் இந்த சேவையைப் பணம் செலுத்தி பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்ற நிலையில், இதில் இருந்து பெரிய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்புரட்சியின் போது, கார் எஞ்சின் ( internal combustion engine) கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து, இப்போது இந்த கண்டுபிடிப்பு, போக்குவரத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று இதை வடிவமைப்பவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.
இந்த முயற்சி வடக்கு கிரெனிச் டியூப் நிலையத்தில் நடக்கின்றது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.
காணொளி: கரன்சி நோட்டு நெருக்கடி : சரக்கு போக்குவரத்து பாதிப்பு
இந்த செய்திகள் உங்கள் ஆர்வத்தை அதிகரிக்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்