You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'போக்குவரத்து இரைச்சலால் ஆபத்தை உணர்த்தும் எச்சரிக்கை ஒலிகளை கேட்க சிரமப்படும் பறவைகள்'
பறவைகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் எச்சரிக்கை ஒலிகளை கேட்பதற்கு வாகன போக்குவரத்தால் உண்டாகும் இரைச்சல் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இப்பறவைகள் தங்களை வேட்டையாடுபவர்களால் தாக்கப்படுவதற்கு ஆபத்து அதிக அளவில் உள்ளது என்றும் அவ்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பரபரப்பான சாலையில் இருந்த இரண்டு வெவ்வேறு பறவை இனங்களை கொண்டு, அவற்றால் அருகாமையில் உள்ள ஆபத்துக்களை உணர்த்தும் எச்சரிக்கை ஒலிகளை கேட்க முடிகிறதா என்று இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
ஒலிபெருக்கிகளில் இருந்து கேட்கப்பட்ட வாகன போக்குவரத்து இரைச்சலால் அருகே இருந்த உணவு மேடையில் உணவுள்ளதா என்பதை இப்பறவைகள் கவனிப்பதை தடுக்க முடியவில்லை என்று தெரிவித்த இந்த ஆய்வு, அதே வேளையில் இந்த வாகன போக்குவரத்து ஒலி, இப்பறவைகளை எச்சரிக்கை ஒலிகளை கேட்க முடியாமல் மறைத்து விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.