2.5 லட்சம் டாலருக்கு சற்றே குறைவாக ஏலம் போன ஹிட்லரின் தொலைபேசி

அமெரிக்காவில் நடைபெற்றுள்ள ஒரு ஏலத்தில் இரண்டாம் உலகப்போரின்போது, அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஒன்று, 2 லட்சத்து 43 ஆயிரம் டாலருக்கு விலைக்கு ஏலம் போயிருக்கிறது.

இந்த தொலைபேசியை வாங்கியவரின் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை.

நாஜிக்களின் தலைவரான அடோல்ஃப் ஹிட்லரின் பெயர், ஒரு ஸ்வஸ்திகை அடையாளம் மற்றும் நாஜிக்களின் அடையாளமான பருந்து ஆகியவை பொறிக்கப்பட்டுள்ள சிவப்பு நிற தொலைபேசி 1945 ஆம் ஆண்டு பெர்லினின் பதுங்கு குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

எல்லா காலத்திற்கு மிகவும் அழிவுக்குரிய ஆயுதமென இந்த தொலைபேசியை ஏலமிட்டுள்ள மேரிலேண்டிலுள்ள ஏல நிறுவனம் விவரித்துள்ளது.

மேலதிக விவரங்களுக்கு:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்