You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் அதிபரான பிறகு வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.
"அமெரிக்கா தனது மிகச் சிறந்த கூட்டாளியான ஜப்பானுக்கு 100 சதவீதம் துணையாக நிற்கும்" என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவிடம் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அந்த ஏவுகணை ஜப்பான் கடலின் கிழக்கு பகுதியில் சுமார் 500கிமீ வரை பயணம் செய்தது என தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சோதனை "முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள முடியாதது" என அபே தெரிவித்துள்ளார். ஜப்பான் அதிகாரிகள் அந்த ஏவுகணை தங்கள் கடற்பகுதியை அடையவில்லை என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவிற்கான தனது விஜயத்தில், கூட்டு மாநாட்டில் பேசிய அபே, "தங்களின் கூட்டணியை மேலும் தொடர்வதில்" தீவிரமாக இருப்பதாக டிரம்ப் உறுதியளித்தார் என அபே தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு கடமைகள் நியாயமற்றது; மேலும் அமெரிக்க படைகளை ஜப்பானில் நிறுத்தவதற்கான முழு தொகையை அளிக்க ஜப்பானிடம் கோரினார்.
கடந்த வருடத்தில் வட கொரியா பல அணுசக்தி சோதனைகளை நடத்தியதால் அந்த பிராந்தியத்தில் எச்சரிக்கையும் கோபமும் எழுந்துள்ளன.
கொரிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் உள்ள வடக்கு பியாங்யானில் உள்ள பாங்யான் விமான தளத்தில் இந்த ஏவுகணை சோதனை, ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி காலை 7.55 மணிக்கு நடைபெற்றது.
அந்த ஏவுகணை 550கிமீ உயரம் வரை சென்றது என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமையில் கூறப்பட்டுள்ளது; மேலும் அது மிதமான தூரம் பாயும் ரொடாங் ஏவுகணையாக தெரிகிறது.
ஜனவரி மாதத்தில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது ராணுவம் அமெரிக்காவை அடைந்து அணு ஆயுத போர் புரியும் வல்லமை கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை சோதிக்கும் திறனை நெருங்கிவிட்டதாக எச்சரித்திருந்தார்.
ஆனால் இதனை டிரம்ப் தனது ட்வீட்டில் "அது நடைபெறாது" என்று மறுத்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்