எலிகளின் மூளையில் கொல்லும் உணர்வை கட்டுப்படுத்தும் பகுதி கண்டுபிடிப்பு

எலிகளிடம் சோதனை ஆய்வு

பட மூலாதாரம், Taylor Weidman/Getty Images

எலிகளுக்கு உள்ள கொல்லும் உள்ளுணர்வை கட்டுப்படுத்தவும், அந்த உணர்வை தூண்டிவிட்டு பின்னர் அமைதிப்படுத்தவும், எலிகளின் மூளையில் இருக்கின்ற பகுதிகளை விஞ்ஞானிகள் இனம்கண்டுள்ளனர்.

எலிகள் இரையை தேடி சென்று கொல்வதற்கு இருக்கின்ற உணர்வையும், அந்த உணவை கடிப்பதற்கு இருக்கின்ற தசைகளையும் ஒருங்கிணைக்கின்ற இரண்டு நரம்பணு இணைகளை (நியூரான்களை) அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் துல்லியமாக இனம்கண்டுள்ளனர்.

எலிகள்

பட மூலாதாரம், Sanjay Kanojia/AFP/Getty Images

எலிகள் இரைகளை கொல்வதையும், கடிப்பதையும் தூண்டுகின்ற வகையில் ஆய்வின்போது, லேசர் கதிர் விளக்கு மூலம் இந்த நரம்பணு இணைகள் தகவமைக்கப்பட்டன.

இரையை கொல்லுகின்ற நரம்பணுவை தூண்டியவுடன், அவற்றின் பாதைகளில், போலி பூச்சிகள், பாட்டில் மூடிகள் என எதை பார்த்தாலும் எலிகள் வெறியோடு தாக்கியதை இந்த ஆய்வாளர்கள் அறிய வந்திருக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்