ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வனவிலங்குகளை செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்கத் தடை

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், புலி, சிங்கம் போன்ற வன விலங்குகளை செல்லப் பிராணிகளாக வைத்திருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் வளம் மிக்க வளைகுடா மாநிலத்தில் சிலர் சிறுத்தை போன்ற விலங்குகள் வளர்ப்பதை தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர்.

பல ஆண்டுகளாக சிறுத்தைகள் அங்கு வீதிகளில் அலைவதை போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.

அந்த புகைப்படங்களில் கார்களின் பின் பகுதியில் சிங்கங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களும் அடங்கும். மேலும் துபாய் கடற்கரையில் ஐந்து புலிகள் இருப்பது போன்ற காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் உள்ள ஆபத்துத்துக்களை அதிகாரிகள் அறிந்திருப்பதாகவும் எனவே இம்மாதிரி விலங்குகளை பொதுவெளிக்கு அழைத்து வருபவர்களுக்கு சிறைதண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் உள்ள ஆபத்துத்துக்களை அதிகாரிகள் அறிந்திருப்பதாகவும் எனவே இம்மாதிரி விலங்குகளை பொதுவெளிக்கு அழைத்து வருபவர்களுக்கு சிறைதண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.