You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடத்தப்பட்ட லிபியா பயணிகள் விமானம் ( புகைப்படத் தொகுப்பு)
லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் கடத்தப்பட்டுள்ளதாகவும், மால்டாவில் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டிருப்பதாகவும் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஆஃப்ரிகியா ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் சட்டவிரோத இடையூறு ஏற்பட்டிருப்பதாக மால்டா சர்வதேச விமான நிலையம், ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்தில் பெருமளவிலான சிறப்பு படையினரைக் காண முடிவதாக அங்குள்ள ராய்டர்ஸ் செய்தி முகமையின் புகைப்படைக் கலைஞர் டரின் ஜமிட் லுபி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், விமானத்தில் உள்ளவர்களுடன் இதுவரை எந்தத் தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மால்டாவுக்கான சில விமானங்கள் இத்தாலியத் தீவான சிசிலிக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.