இந்த ஆண்டு வன உயிரின புகைப்பட கலைஞர் போட்டி – மக்களின் தேர்வு விருது (புகைப்படத் தொகுப்பு)

கனடாவின் மனிடோபாவிலுள்ள வபுஸ்க் தேசிய பூங்காவில், தாயின் பின்னால் தொங்கி கொண்டு உறைபனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் பனி கரடிக் குட்டி

சுவிட்ஸர்லாந்தில் டெய்ஸி கிலார்டினி புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வன உயிரின புகைப்பட கலைஞர் போட்டியில், மக்கள் தெரிவு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 25 புகைப்படங்களில் ஒன்றாகும். இது லண்டன் இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

95 நாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட ஏறக்குறைய 50 ஆயிரம் புகைப்படங்களில், விருதுக்கு முன்னதாக தெரிவு செய்யப்பட்ட 25 புகைபடங்களையும் கீழே காணலாம்.

அன்னையின் கரம்

அலாங் மஃபார் ரிநோடிர், பிரான்ஸ்

அலாங் மஃபார் ரிநோடிர் ஜப்பானில் மேற்கொண்ட குளிர்கால பயணத்தின்போது ஜிகோகுடானி பனி குரங்கு பூங்காவுக்கு சென்றிருந்தார். தாய் குரங்கின் கை கட்யின் தலையை மூடி பாதுகாப்பாக வைத்திருக்க தூங்குகிற ஜப்பானிய குரங்கின் படத்தை அப்போது தான் கிளிக் செய்தார்.

சந்தர்ப்பவாத மஞ்சள் நிற முதலை

பென்ஸ் மேட், ஹங்கேரி

பாதுகாப்பாக மறைந்திருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும், 4 மீட்டர் (13 அடி) நைல் முதலை கொல்வதை கண்பது மனதை உறைய வைக்கிறது. இயற்கையில் இறந்ததை இந்த முதலை உண்பது தென் ஆப்ரிக்காவின் ஸிமான்கா தனியார் விளையாட்டு வாழிவிடத் தீவில் பென்ஸ் மேட்டால் படம் பிடிக்கப்பட்டது. சூரிய ஒளியில் குளிர் காயவும் இந்த முதலை வந்திருந்தது.

கொல்வதற்கு வெறிக்கும் பார்வை

ஜோகான் கலோப்பர்ஸ், தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்காவில் ககாலாகாடி எல்லை தாண்டிய பூங்காவில் பிறந்த பிறகு இந்த சிறிய மறிமானை ஜோகான் கலோப்பர்ஸ் கண்டார். அந்த நாளிலேயே அதனுடைய இறப்பை பார்ப்பார் என்று அவர் நினைக்கவில்லை. இந்த சிறி மறிமான் மந்தை ஒரு சிங்கக் கூட்டத்தை கடந்து சென்றது. அதில் ஒரு மறிமான் குட்டியை பெண் சிங்கம் ஒன்று பிடிக்க, ஆண் சிங்கம் அதனை பின்னர் எடுத்துகொண்டது.

குரங்கு பந்து

தாமஸ் கோக்டா, ஜெர்மனி

ஜப்பானின் ஷோடோஷிமா தீவிலுள்ள குளிர் காலநிலை, "மங்கி பால்" என்று கூறப்படும் குரங்குகள் வட்டவடிவில் கூடுவதற்கு காரணமாகிறது. அப்போது ஐந்து அல்லது அதற்கு மேலான குரங்குகள் தங்களை வெப்பமாக பராமரித்துகொள்ள இவ்வாறு கூடுகின்றன. தாமஸ் கோக்டா ஒரு மரத்தில் ஏறி இந்த படத்தை எடுத்துள்ளார்.

புயலை சந்திப்பது

குன்தர் ரியேக்லி, ஜெர்மனி

குன்தர் ரியேக்லி அன்டார்டிக்கா பனி கடலில் சூரிய ஒளி பிரகாசித்த வேளையில் வந்திருந்தார். மாலையில் புயல் தொடங்கியது பனி பொழிந்தது. எம்பரர் பென்குயின்கள் நெருங்கி நின்று தங்களை பாதுகாத்து கொள்வதை படம் எடுப்பதில் அவர் தன்னுடைய முயற்சியை ஒருமுகப்படுத்தினார்.

பேய் பனி வாத்து

கோர்டன் இலிக்

அமெரிக்காவில் நியூ மெக்ஸிகோவிலுள்ள பாஸ்கியு டெல் அப்பாச் தேசிய வன உயிரின புகலிடத்தில், அதிகாலை ஊதா நிற வெளிச்சத்தில் இந்த பனி வாத்துக்கள் ஏறக்குறைய பேய்கள் போல தோற்றமளிக்கின்றன.

சிஸ்டர்ஸ்

பெர்னாடு வாசியோல்கா, ஜெர்மனி

தென் ஆப்ரிக்காவில் ககாலாகாடி எல்லை தாண்டிய பூங்காவில் நீர் முகதுவாரத்திற்கு அருகில் பெர்னாடு வாசியோல்கா ஒரு சிங்க கூட்டத்தை பார்த்தார். ஆண் சிங்கங்களில் ஒன்று அருகிலுள்ள மரத்தின் கிளைகளில் மீது தெளித்து அடையாளமிட்டது, பின்னர், இரு பெண் சிங்கங்கள் அந்த அடையாளத்தை முகர்ந்து, சற்று நேரம் அதே நிலையை அப்படியே பராமரித்தது.

சண்டையில்

ஸ்டீபன் பால்ச்சர், நியூசிலாந்து

சீனாவின் சின்லிங் மலைகளிலுள்ள ட்சௌட்ச்சு இயற்கை பாதுகாப்பு தளத்திலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் காணப்படுகின்ற பொன் நிற சப்பை மூக்கு குரங்கை புகைப்படம் பிடிக்க ஸ்டீபன் பால்ச்சர் ஒரு வாரம் செலவிட்டுள்ளார். குளிர்கால உறைபனியை தாங்கி கொள்ளும் வகையில் மிக அடர்த்தியான உரோமங்களை கொண்டுள்ள இந்த குரங்கினம் கொண்டிருக்கிறது. இரண்டு ஆண் குரங்குகள் சண்டையிட இருப்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது. ஒன்று பாறையின் மேல் உள்ளது. இன்னொன்று இளம் குரங்கோடு உள்ளது.

தலையோடு தலை

தாபியோ கைஷா, பின்லாந்து

இந்த காட்டு மாடு ஜோடியை அதனுடைய இயற்கை வாழிடத்தில் வைத்து பார்க்க, நார்வேயிலுள்ள டவ்ரெப்ஜெல்-சுண்டால்ஸ்ஃப்ஜெல் இயற்கை பூங்காவுக்கு தாபியோ கைஷா பயணம் மேற்கொண்டார். வசந்த காலம் பருவ எழுச்சி அளிக்கும் காலமாக இல்லாது இருந்தபோதும், இவை இரண்டும் தங்களின் வலிமையை கடுமையாக பரிசீலனை செய்து பாக்க தொடங்கிவிட்டன. அவற்றின் தலைகள் ஒன்றுடன் ஒன்று மோதியபோது, பலந்த ஒலி காற்றை நிறைத்தது.

கொலராடோ சிவப்பு

அன்னி காட்ஸ், அமெரிக்கா

அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் அஸ்பென்னில் வைத்து, ஜனவரி மாதத்தில் சுறுசுறுப்பான, தெளிவான ஒரு நாளில் தன்னுடைய அண்டை வீட்டாரின் வயலில் வைத்து கொலராடோ சிவப்பு நரி வேட்டை நடைபெற்றபோது அன்னி காட்ஸ் இதனை கண்டார். அவரை நெருங்கி புகைப்படக் கருவியின் லென்ஸை பார்த்த வேளையில், சரியாக அன்னி காட்ஸ் அதனை படம்பிடித்தார்.

ஜோடி

செர்ஜியோ சார்தா, இத்தாலி

இந்தோனீஷியாவின் பாலி தீவில் துலாம்பென் கடற்கரையில் வாகனத்தில் பயணித்தபோது, செர்ஜியோ சார்தா, சிறிய கோல்மேன் இறால்களின் முள் காப்பு அமைப்புடைய ஒரு நேர்த்தியான ஜோடியான பிரகாசாசமான நிறத்திலான உயிரினத்தை கண்டார். இந்த முள் காப்பு அமைப்பில் இருக்கும் பெரிய இறகு வடிவமானது, மனிதருக்கு மிகவும் நஞ்சானது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக இந்த இறகுகளுக்கு இடையிலான பாதுகாப்பான பகுதிகளை இறால்கள் தேடுகின்றன.

ஜெல்லி ஸ்டார்பஸ்ட்

அன்டிரியா மார்ஷெல், அமெரிக்கா

அன்டிரியா மார்ஷெல் மொஸாம்பிக் கடற்கரையில் நீருக்கடியில் நீச்சலின்போது, பெரிய ஜெல்லி மீன்களை கண்டார். இந்த கடலோரத்தில் இருந்த போக்குவரத்து அமைப்பை சாதகமாக பயன்படுத்தி, பல குறு நட்சத்திரமீன்கள், சந்தர்ப்பவாத ரைடர்ஸால் மூடப்பட்டிருந்தன. மென்மையான விளக்குகள் அமைப்பு, ஜெல்லி மீன்களை பார்வையாளர் வண்ணமயமாக இழைநயத்தோடு காண செய்கிறது.

எழுந்து நிற்றல்

மைக்கேல் லாம்பியே, கனடா

இது இனபெருக்க காலம் என்பதால், எல்லா ஆண் வான்கோழிகளும் பெண் வான்கோழிகளை தேடுகின்றன. இந்த வான்கோழி அதற்கு முன்னால் நிற்பது தன்னுடைய பிரதிபலிப்பு என்று அறியாமல், அதனையே எண்ணி கொண்டு நிற்கிறது.

இரவில்

காரின் எக்னர், அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள சன் அன்றோனியோவில் அமைந்துள்ள பிராக்கன் குகைக்கு கோடைகால மாதங்களில் 20 மில்லியன் மெக்ஸிகோ வாலற்ற வவ்வால்கள் குட்டியிடவும், அவற்றை வளர்க்கவும் வருகின்றன. ஒவ்வொரு நாளும் மாலையில் பசியெடுக்கும் தாய் வவ்வால்கள், பூச்சிகளை பிடிப்பதற்காக அந்த குகையின் நுழைவாயிலை கடப்பதை தான் காரின் எக்னர் படம் பிடித்துள்ளார்.

வில்லோ மர படிகம்

டேவிட் மையிட்லான்ட், ஐக்கிய ராஜ்ஜியம்

வில்லோ மரப் பட்டையில் இருந்து கிடைக்கின்ற ரசாயன சாலிசின் மருந்து வகையை படிகமாக்கி புகைப்படம் எடுத்துள்ளார். சாலிசின் மருந்துதான் அடைப்படையான வலி நிவாரண ஆஸ்பிரினை உருவாக்குகின்றன. இந்த காரணத்தால் தான் வில்லோ மரப் பட்டையை சில விலங்குகள் மென்று சாப்பிட பயன்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.

நீல வால்

மாரியோ சியே, ஸ்பெயின்

இந்த இயற்கை குளத்திற்கு மீன் கொத்தி அடிக்கடி வருகிறது. மாரியோ சியே ஒரு வேகமாக மூடும் செயற்கை வெளிச்சத்தோடு இதனை படம் பிடித்துள்ளார். இந்த மீன் கொத்திக்கு வெளிச்சம் அளிக்க பல ஃபிலஸ் விளக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். நீரை நோக்கி தெலைகீழாக செல்கையில், எழுகின்றபோது படம்பிடிக்க தொடர்ந்து எரிகின்ற விளக்குகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார்

குவிமையமாக கண்

அல்லி மேடோவெல், அமெரிக்கா/ஐக்கிய ராஜ்ஜியம்

நீருக்கடியில் இருக்கின்ற நிறங்கள் மற்றும் அடுக்குகளில் அல்லி மேடோவெல் கவனம் செலுத்தி வருகிறார். இரவு முழ்கியபோது படம்பிடித்த கிளியினது போன்ற அலகும் பளபளப்பான வண்ணமுடைய மீன்வகை .

சுருள்

மார்கோ கார்கியுலோ, இத்தாலி

சபெல்லா ஸ்பால்லான்ஸாணி என்பது கடலிலுள்ள போலிசாய்ட்டி வகைகளில் ஒன்று. இது முள் புழு என்று அறியப்படுகிறது. இந்த புழு சளி போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. அது கடினமாகி மணலில் இருந்து குழாய் போல நீட்டி கொண்டு இருக்கிறது, இந்த குழாய்க்குள் இழுத்துகொள்ளக்கூடிய உணவு ஊட்டும் உணர் கொம்புகளில் இரண்டு அடுக்குகள் உள்ளன. ஒரு அடுக்கு சுருள் வடிவத்தை கொண்டுள்ளது.

கண் பார்வை தொடர்பு

கே எட்வர்ட்ஸ், ஐக்கிய ராஜ்ஜியம்

கிரேக்கத்தின் கெர்கினி எரியில் காணப்படும் தால்மாஷியன் பெலிக்கான், உலகிலேயே மிகவும் பெரிய பெலிக்கான் இனமாகும். இது கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஆசியாவை சேர்ந்த்தாகும். இருப்பினும், சில இடங்களில் வேட்டையாடுதல், நீர் மாசுபாடு மற்றும் உறைவிட இழப்பு குறிப்பாக சதுப்புநிலம் குறைந்து வருவதால் இத்தகைய பெலிக்கான்களின் குறைந்து வருகிறது.

குழப்பம்

ருடி குல்ஷோஃப், தென் ஆப்ரிக்கா

வேட்டையாடுதலால், தென் ஆப்ரிக்காவின் வெல்கெவென்டனிலுள்ள தென் பகுதி வெள்ளை காண்டாமிருகத்தின் எதிர்காலத்தின் உறுதியின்மையை பற்றி படம் பிடிக்க ருடி குல்ஷோஃப் விரும்பினார். இரண்டு காண்டாமிருகங்கள் ஒன்றுகொண்டு எதிராக நடந்து சென்றபோது, அந்த தருணத்தை சரியாக கிளிக் செய்துபோது, இரண்டு தலையடைய காண்டாமிருகம் செல்வது போன்ற மாய தோற்றமுடைய புகைப்படத்தை எடுத்தார்.

சுவையான மென்நயம்

கிறிஸ்டோபால் செர்ரானோ, ஸ்பெயின்

இந்த இயற்கையான உலகு வினோதமான எண்ணற்ற தருணங்களை வழங்குகிறது. ஒரு மலரின் அல்லிவட்டத்தில் இருக்கும் தேனை சுவைக்க அழகான ரீங்கார பறவை தன்னுடைய அலகை மெதுவாக கொண்டு செல்கிறது. இந்த தருணத்தை கோஸ்டோ ரிக்காவின் லாஸ் குயேட்ஸாலெஸ் தேசிய பூங்காவில் வைத்து படம்படித்திருக்கிறார் கிறிஸ்டோபால் செர்ரானோ.

காலை உணவு வேளை

காரி ஹில், நியூசிலாந்து

கென்னியாவின் நைரோபியில் ஒட்டகச்சிவிங்கி பண்ணை உன்றை வாங்கிய பிறகு, அவற்றின் முக்கிய வாழிடங்கள் பிரிக்கப்பட்டு சிறியதாக மாறிவருவதால், அங்கிருக்கும் ரோத்திஸ்சைல்டு ஒட்டகச்சிவிங்கிகள் அழியும் ஆபத்தில் இருப்பதை அறிய வந்தனர். எனவே இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகளை மீண்டும் வனங்களில் புதிய இனப்பெருக்க திட்டத்தை அறிமுகப்படுத்தினர். இன்று பார்வையாளர்கள் அங்கு வாழும் ஒட்டகச்சிவிங்கிகளை பார்த்து ரசிக்க முடியும்.

பட்டுப்பூச்சி சுருட்டு

ரின்ஹால்டு சராங், ஆஸ்டிரியா

கிரேக்கத்திலுள்ள கெர்கினி ஏரியில் ரின்ஹால்டு சராங் பறவைகளை படம் பிடித்து கொண்டிருந்தார். ஆனால், நிலைமைகள் சரியில்லை. எனவே, பிற தெரிவுகளை தேடினார். இந்த பட்டுப்பூச்சியை பார்த்த இவர் ஒலர்ந்த சுருள் பதர் ஒன்றில் இருப்பதை பட்மபிடித்தார், பட்டுப்பூச்சி வேகமாக நகர தொடங்கியதால், அவர் மிகவம் வேகமாக செயல்பட வேண்டியிருந்தது

வானவில் இறகுகள்

விக்டர் டயாக்ட்

இந்த பறவையின் இறகு விளிம்பு கிரேட்ங்காக செயல்படுகிறது. முகடுகள் மற்றும் பிளவுகளுக்குள் மீண்டும் மீண்டும் செய்கின்ற மேற்பரப்பு வடிவமைப்பை சிறப்பாக செய்ய இந்த இறகு தான் உதவுகிறது. உள்ளே வருகின்ற ஒளி விரிந்து தெரியவும், பல வண்ணங்களில் பிரிந்து காணப்படவும், இத்தகைய வானவில் வண்ண தோற்றத்தை ஏற்படுத்துவும் இந்த இறகு பயன்படுகிறது.