You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மொசூல் நகரில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவானோர் மீது பழிவாங்கும் நடவடிக்கையா?
மொசூல் நகரில் இருந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகள் அருகாமை கிராமங்களில் உள்ள ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது பழிவாங்கும் விதமாக தாக்குதல்கள் நடத்தி வருவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியுள்ளது.
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள், பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டு சித்திரவதை மற்றும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக இந்த குழு தெரிவித்துள்ளது.
மொசூலின் கிழக்கு மாவட்டங்களில் முன்னேறிய இராக்கின் சிறப்பு படைகள், ஐ . எஸ். போராளிகள் எவரேனும் எஞ்சியுள்ளனரா என்ற தேடுதல் முயற்சியில் அங்கு சற்று நின்று பார்தது சென்றனர்.
கடந்த 2014 ஜூன் மாதத்தில் இந்த நகரத்தை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியது.
இதனிடையே, கடவுளின் எதிரிகளை எதிர்த்து போராட வேண்டும் என்றும் தங்கள் நிலைகளை விட்டுத் தர வேண்டாம் என்றும் தங்கள் போராளிகளை கேட்டுக் கொள்ளும் ஐ .எஸ். தலைவரான அபு பக்கர் அல் பகாடியின் குரல் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒலிநாடாவை ( ஆடியோ) அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
நகரில் உள்ள வட்டசந்தியின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கோழி கூண்டுக்குள் ஐ.எஸ் அமைப்பின் அனுதாபிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அடைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டதாக அம்னெஸ்டி அமைப்பு சில சாட்சிகளை பேட்டி கண்டதில் கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, மீண்டும் கைப்பற்றப்பட்ட குக்ஜாலி மாவட்டத்தில் தாங்கள் பெற்ற வெற்றிகளை நிலை நிறுத்திக்கொள்ள அந்த மாவட்ட வீதிகளில் யாரேனும் ஐ.எஸ். போராளிகள் உள்ளனரா என்று சல்லடை போட்டு தேடும் முயற்சியில் இராக் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
பதுங்கியிருந்து நடத்தப்படும் தாக்குதல்கள், ரகசிய சுரங்கங்கள் மற்றும் கண்ணி பொறிகள் ஆகியவை குறித்த அச்சங்களுக்கு மத்தியில் மத்தியில் இராக் ராணுவம் எச்சரிக்கையுடன் நகர்ந்து வருவதாக ஒரு பிபிசி தெரிவித்துள்ளார்.