நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக ஆய்வு குழு முடிவு
வட கிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இன்னும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சிபோக் நகரிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு இரு வருடங்களுக்கும் மேலான நிலையில் இந்த புதிய ஆய்வின் முடிவுகள் வெளிவந்துள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு வரும் வெளி நபர்களை முறையாக சோதிப்பதில்லை, போதிய பாதுகாவர்கள் இல்லை மற்றும் ஒரே வகுப்பறையில் 95மாணவர் - மாணவியர் வரை நெரிசல் நிறைந்து இருப்பதாக இரு நைஜீரியா பெண்கள் குழுவினர் அறிசக்கை விடுத்துள்ளனர்.
முன்னர் இந்த மாதத்தில் 21 சிபோக் பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், இன்னும் பலர் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்லாமியவாத குழுவான போகோ ஹராமால் நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் கொல்லப்பட்டும் மற்றும் கடத்தப்பட்டும் உள்ளனர் .












