ஹிட்லர் வாழ்ந்த வீட்டை இடிக்கப்போவதாக ஆஸ்திரேயா தகவல்

ப்ரனவ் ஆம் இன் என்ற நகரில் உள்ள ஹிட்லரின் வீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப்ரனவ் ஆம் இன் என்ற நகரில் உள்ள ஹிட்லரின் வீடு

அடோல்ஃப் ஹிட்லர் வாழ்ந்த வீட்டை கையகப்படுத்தி அதை இடிக்கப்போவதாக ஆஸ்திரேயாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில் ஒரு புதிய கட்டடம் அமைக்கப்படவிருக்கிறது.

ப்ரனவ் ஆம் இன் என்ற நகரில் உள்ள முன்னாள் விருந்தினர் மாளிகை, ஜெர்மனியின் போர்கால தலைவரான ஹிட்லரை வழிப்பட்டுக்கொண்டிருக்கும் நாஜி ஆதரவாளர்களின் புனித தளமாக மாறிவிடுமோ என அதிகாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்