சீறும் சிங்கங்கள் : அதிரும் காடுகள்

தமது குட்டிகளைக் காப்பாற்ற ஆப்ரிக்க காடுகளில் மோதும் பெண் சிங்கங்களின் அபூர்வமான படங்கள்.

அமெரிக்காவில் தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றும் மைக்கேல் மாஸ் அண்மையில் எடுத்த இப்படங்கள் மிகவும் அபூர்வமானவை. இரண்டு தனித்தனிக் குழுவைச் சேர்ந்த பெண் சிங்கங்கள் தமது குட்டிகளை காப்பாற்ற ஆப்ரிக்க காடுகளில் எப்படி மோதுகின்றன என்பதை இப்படங்கள் காட்டுகின்றன.
படக்குறிப்பு, அமெரிக்காவில் தகவல் தொழிநுட்பத்துறையில் பணியாற்றும் மைக்கேல் மாஸ் அண்மையில் எடுத்த இப்படங்கள் மிகவும் அபூர்வமானவை. இரண்டு தனித்தனிக் குழுவைச் சேர்ந்த பெண் சிங்கங்கள் தமது குட்டிகளை காப்பாற்ற ஆப்ரிக்க காடுகளில் எப்படி மோதுகின்றன என்பதை இப்படங்கள் காட்டுகின்றன.
தென் அப்ரிக்காவிலுள்ள மடிக்வே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் பெண் சிங்கங்கள் மோதும் வேளையில் இப்படங்கள் எடுக்கப்பட்டன.
படக்குறிப்பு, தென் அப்ரிக்காவிலுள்ள மடிக்வே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் பெண் சிங்கங்கள் மோதும் வேளையில் இப்படங்கள் எடுக்கப்பட்டன.
ஒரு சிங்கக் குட்டிக்கு ஆபத்து என்பது பெரும்பாலும் தமது இனத்திலிருந்தே ஏற்படுகிறது. அநேகமாக தந்தை அல்லாத ஆண் சிங்கத்திடமிருந்தே இந்த ஆபத்து வருகிறது.
படக்குறிப்பு, ஒரு சிங்கக் குட்டிக்கு ஆபத்து என்பது பெரும்பாலும் தமது இனத்திலிருந்தே ஏற்படுகிறது. அநேகமாக தந்தை அல்லாத ஆண் சிங்கத்திடமிருந்தே இந்த ஆபத்து வருகிறது.
ஒரு தனிப் பெண் சிங்கத்தால், தாக்குதலை நடத்தும் இதர சிங்கங்களிடமிருந்து தமது குட்டிகளை காப்பாற்ற முடியாது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பெண் சிங்கங்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்து பாதுகாப்பை கொடுக்கின்றன. கூட்டாக செயற்பட்டால் தமது குட்டிகளை காப்பாற்றும் வாய்ப்புகள் அதிகம்.
படக்குறிப்பு, ஒரு தனிப் பெண் சிங்கத்தால், தாக்குதலை நடத்தும் இதர சிங்கங்களிடமிருந்து தமது குட்டிகளை காப்பாற்ற முடியாது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பெண் சிங்கங்கள் ஒரு கூட்டமாகச் சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்து பாதுகாப்பை கொடுக்கின்றன. கூட்டாக செயற்பட்டால் தமது குட்டிகளை காப்பாற்றும் வாய்ப்புகள் அதிகம்.
சிங்கங்கள் தாக்கி அடித்துக் கொன்று மாமிசம் உண்ணும் விலங்குகள். பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண் சிங்கங்களே வேட்டையாடும். மான், வரிக்குதிரை மற்றும் இதர காட்டுப் பிராணிகளையே அதிகம் வேட்டையாடும்.
படக்குறிப்பு, சிங்கங்கள் தாக்கி அடித்துக் கொன்று மாமிசம் உண்ணும் விலங்குகள். பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண் சிங்கங்களே வேட்டையாடும். மான், வரிக்குதிரை மற்றும் இதர காட்டுப் பிராணிகளையே அதிகம் வேட்டையாடும்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாஸ், ஒன்பதாவது முறையாக அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்றாலும் இது போன்ற ஒரு காட்சியை அவர் இதுவரை கண்டதில்லை என்கிறார்.
படக்குறிப்பு, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மாஸ், ஒன்பதாவது முறையாக அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்றாலும் இது போன்ற ஒரு காட்சியை அவர் இதுவரை கண்டதில்லை என்கிறார்.
இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெண் சிங்கங்கள் மற்ற கூட்டங்களிலிருந்து வரும் குட்டிகளை கொல்லக் கூடியவை என்கிறார் மாஸ். "ஆனால் நல்ல வேளையாக இந்தச் சநதர்ப்பத்தில் இரண்டு பெண் சிங்கங்களும் தனித் தனி வழியே சென்றன."
படக்குறிப்பு, இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெண் சிங்கங்கள் மற்ற கூட்டங்களிலிருந்து வரும் குட்டிகளை கொல்லக் கூடியவை என்கிறார் மாஸ். "ஆனால் நல்ல வேளையாக இந்தச் சநதர்ப்பத்தில் இரண்டு பெண் சிங்கங்களும் தனித் தனி வழியே சென்றன."
இரு பெண் சிங்கங்களும் பல நிமிடங்களுக்கு மோதின. நாங்கள் பார்த்தவரை பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இப்படியான ஒரு மோதலை பார்ப்பதே ஆச்சரியமான விஷயம் என்கிறார் மாஸ்.
படக்குறிப்பு, இரு பெண் சிங்கங்களும் பல நிமிடங்களுக்கு மோதின. நாங்கள் பார்த்தவரை பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இப்படியான ஒரு மோதலை பார்ப்பதே ஆச்சரியமான விஷயம் என்கிறார் மாஸ்.