இலங்கையின் புதிய ஜனாதிபதி அகதிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பாரா? - காணொளி

காணொளிக் குறிப்பு, இலங்கையின் புதிய ஜனாதிபதி அகதிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பாரா? - காணொளி
இலங்கையின் புதிய ஜனாதிபதி அகதிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பாரா? - காணொளி

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அநுர குமார திஸாநாயக்க. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இலங்கையின் 9-வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக செப்டம்பர் 23-ஆம் தேதி பதவியேற்றார் அநுர.

இடதுசாரி கொள்கையொன்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியொன்று இலங்கையில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

பல தசாப்தங்களாக நீடித்த போரின் பிடியில் சிக்கி தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்த மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன? அவர்கள் அநுர குமார திஸாநாயக்கவின் இந்த வெற்றியை எவ்வாறு பார்க்கின்றனர்? நாடு திரும்ப ஏற்ற சூழலை அவர் உருவாக்குவாரா?

தமிழகத்தின் ராமேஸ்வரம் மண்டபத்தில் தங்கியுள்ள இலங்கை மக்கள் கூறுவது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)