அல்லு அர்ஜுன்: காலையில் கைது, மாலையில் ஜாமீன் - என்ன நடந்தது?
கடந்த டிசம்பர் 4ஆம் தேதியன்று புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி கூட்டத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனை நம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. "அல்லு அர்ஜுன் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கியுள்ளது" என்று ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து அல்லு அர்ஜுன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



