காணொளி: 'விஜய், சீமான் 3வது இடத்துக்கு போட்டி' - அமைச்சர் சொன்னது என்ன?
காணொளி: 'விஜய், சீமான் 3வது இடத்துக்கு போட்டி' - அமைச்சர் சொன்னது என்ன?
விஜயின் திருச்சி பிரசாரம் குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "விஜயை பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை, சிந்திக்கவும் இல்லை." என்றார்.
மேலும் மக்கள் பொழுதுபோக்கிற்காகத்தான் விஜயை பார்க்க செல்கிறார்கள் எனவும் கூறினார்.
"எடப்பாடி பழனிசாமி 2வது இடத்திற்கு வரவேண்டும் என முயற்சி செய்கிறார். அதேபோல 3வது இடத்திற்கு விஜயும், சீமானும் முயற்சி செய்கிறார்கள்." எனத் தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



