மகா கும்பமேளா: நள்ளிரவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் - திரிவேணி சங்கமத்தில் என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
மகா கும்பமேளா: நள்ளிரவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் - திரிவேணி சங்கமத்தில் என்ன நடந்தது?

உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்றும் வரும் மகா கும்ப மேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 13ம் தேதி முதல் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் புனித நீராட பல கோடி பக்தர்கள் நாடு முழுவதிலிருந்தும் கூடி வருகின்றனர். புதன்கிழமை அதிகாலை அங்கு கூடியிருந்த பக்தர்கள் நீராட நதிக்கரைக்கு செல்லும் வழியில் தடுப்புகளுக்கு அருகே ஏற்கனவே பல பக்தர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். நதியை நோக்கி சென்றவர்கள் அவர்கள் மீது தடுக்கி கீழே விழுந்ததாகவும், அவர்களை பின் தொடர்ந்து சென்றவர்கள் அவர்கள் மீது விழுந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை, மக்கள் எப்போதும் போல் நீராடலாம் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தின் முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)