காணொளி: சினிமாவையே மிஞ்சும் திருட்டு சம்பவம் - யார் இவர்கள்?
காணொளி: சினிமாவையே மிஞ்சும் திருட்டு சம்பவம் - யார் இவர்கள்?
மகாராஷ்டிராவின் சோலாபூர் - துலே தேசிய நெடுஞ்சாலையில் பல வாகனங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அப்படி ஒரு திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிதான் இது. ஒரு பயணிகள் பேருந்தை பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திரைப்படங்களில் வருவது போல ஆபத்தான முறையில் பேருந்தில் ஏறி பேருந்தின் கூரையில் இருந்த பயணிகளின் உடமைகளை கீழே தூக்கி எறிகின்றனர். மேலும், இந்த கும்பலின் திருடும் முறை பற்றி காவல்துறை விளக்கினர்.
இது மட்டுமின்றி, ஓடும் பேருந்தை நிறுத்தியும் பேருந்து சாலையோரத்தில் நிற்கும்போதும் பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருடர்களை பிடிக்க பீட் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க ஒரு புதிய நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



