காணொளி: தவெகவில் இணைந்தது ஏன்? - செங்கோட்டையன் பதில்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜயின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை புதன்கிழமை அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையனுக்கும் கட்சியிலிருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது தொடர்பாக நீண்ட காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
செப்டம்பர் 5-ஆம் தேதி, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றார்.
அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
பிறகு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட நிலையில், அவர் தவெகவில் இணைந்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



