விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் பூச்சிக்கொல்லி தெளிப்பான்
விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் பூச்சிக்கொல்லி தெளிப்பான்
மகாராஷ்டிர மாநிலம் அஹமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த மயூர் காத்வே என்ற இளைஞன் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்காக விவசாயத் தெளிப்பான் பம்பைத் தயாரித்துள்ளார். அவரது புதுமை கண்டுபிடிப்புக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
முன்னதாக அவர் தயாரித்த இயந்திர தள்ளுவண்டி 150 கிலோ எடை கொண்டது, அதை இழுக்க 2 பேர் தேவைப்பட்டனர். பின்னர் அது ஒரு நபர் இழுக்கும் வகையில் இலகுவாக மாற்றப்பட்டது.

ஸ்பிரேயர் பம்பை ஆட்டோமோட்டிவ் முறையில் இயக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க மயூர் விரும்புகிறார். மயூர் தனது கல்லூரியின் உதவியுடன் இந்தப் புதுமைக்காக காப்புரிமை பெற முயற்சிக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



