"மன்னிப்பு கேட்க வார்த்தை இல்லை" - ஜம்மு காஷ்மீர் முதல்வர்

காணொளிக் குறிப்பு,
"மன்னிப்பு கேட்க வார்த்தை இல்லை" - ஜம்மு காஷ்மீர் முதல்வர்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, "பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனக்கு தெரியும், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு என்பது முழுக்க மாநில அரசு பொறுப்பு அல்ல.

ஆனால், முதலமைச்சராக சுற்றுலாத்துறை அமைச்சராக அவர்களை நான் தான் இங்கு அழைத்திருக்கிறேன். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்பும் பொறுப்பு அவர்களை வரவேற்றவனாக எனக்கு உள்ளது. அதை என்னால் செய்ய முடியவில்லை. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகள் இல்லை", என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "தங்கள் தந்தையின் முகத்தை ரத்தத்துடன் பார்த்த குழந்தைகளுக்கு நான் என்ன சொல்ல முடியும்? சில தினங்களுக்கு முன் திருமணமான கப்பற்படை அதிகாரியின் மனைவிக்கு என்ன சொல்ல முடியும்?", என்று வருத்தம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.